Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 399)

Dasaka 39 - மாயையும் கோகுலமும்

த்ருவம் கபடசாலிநோ மதுஹரஸ்ய மாயா பவேத் அஸாவிதி கிசோரிகாம் பகிநிகாகராலிங்கிதாம் த்விபோ நலிநிகாந்தராதிவ ம்ருணாலிகாமாக்ஷிபந் அயம் த்வதநுஜாமஜாமுபல பட்டகே பிஷ்டவாந் த்ருவம் கபடசாலிந: மதுஹரஸ்ய மாயா பவேத் அஸௌ இதி கிசோரிகாம் பகிநிகா கர ஆலிங்கிதாம் த்விப: நலிநி காந்தராத் இவ ம்ருணாலிகாம் ஆக்ஷிபந் அயம் த்வத் அநுஜாம் அஜாம் உபல பட்டகே பிஷ்டவாந் ध्रुवं कपटशालिनो मधुहरस्य माया भवे - दसाविति किशोरिकां भगिनिकाकरालिङ्गिताम् । द्विपो नळिनिकान्तरादिव मृणाळिकामाक्षिपन्नयं त्वदनुजामजामुपलपट्टके पिष्टवान्

குருவாயூரப்பா! அந்தக் குழந்தையைக் கண்ட கம்சன், “இந்தக் குழந்தை மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீஹரியின் மாயையாகவே இருக்கவேண்டும்”, என்று நினைத்தான். அந்தக் குழந்தையை, யானை ஒன்று குளத்தில் இருந்து தாமரை ஒன்றை வெகு அலட்சியமாகப் பறிப்பது போன்று, தேவகியிடம் இருந்து இழுத்தான். உன் தங்கையான, பிறப்பற்ற அந்தக் குழந்தையை மிகவும் வேகமாக அங்கு இருந்த பாறையில் அடித்தான்.