Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 398)
Dasaka 39 - மாயையும் கோகுலமும்
ததஸ்த்வதநுஜாரவ க்ஷபித நித்ரவேக த்ரவத் படோத்கர நிவேதித ப்ரஸவ வார்த்தயைவார்த்திமாந் விமுக்த சிகுரோத்கரஸ்த்வரிதமாபதந் போஜராஜ அதுஷ்ட இவ த்ருஷ்டவாந் பகிநிகாகரே கந்யகாம் தத: த்வத் அநுஜா ரவ க்ஷபித நித்ர வேக த்ரவத் பட உத்கர நிவேதித ப்ரஸவ வார்த்தயா ஏவ ஆர்த்திமாந் விமுக்த சிகுர உத்கர: த்வரிதம் ஆபதந் போஜ ராஜ அதுஷ்ட இவ த்ருஷ்டவாந் பகிநிகா கரே கந்யகாம் ततस्त्वदनुजारवक्षपितनिद्रवेगद्रव - द्भटोत्करनिवेदितप्रसववार्तयैवार्तिमान् । विमुक्तचिकुरोत्करस्त्वरितमापतन् भोजरा - डतुष्ट इव दृष्टवान् भगिनिकाकरे कन्यकाम्
குருவாயூரப்பா! உன்னுடைய சகோதரியான அந்தப் பெண் அழுவதைக் கேட்டு காவலர்கள் கண் விழித்தனர். குழந்தை பிறந்த விவரத்தைக் கம்சனிடம் சென்று கூறினர். இதனைக் கேட்ட கம்சன் மிகுந்த மன வருத்தம் கொண்டு, விரித்த தலையுடன் விரைவாக சிறைக்கு வந்தான். அந்தக் கொடியவன் தனது தங்கையிடம் ஒரு பெண் குழந்தை இருந்ததைக் கண்டு மனம் கலங்கி நின்றான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-4ன் சுருக்கமாக இந்த ச்லோகம் தொடங்கி ஐந்து ச்லோகங்கள் உள்ளன.