Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 397)
Dasaka 39 - மாயையும் கோகுலமும்
ப்ரஸுப்த பசுபாலிகாம் நிப்ருத மாருதத்பாலிகாம் ஆபாவ்ருத கவாடிகாம் பசுபவாடிகாமாவிசந் பவந்தமயமர்ப்பயந் ப்ரஸவதல்பகே தத்பதாத் வஹந் கபடகந்யகாம் ஸ்வபுரமாகதோ வேகத: ப்ரஸுப்த பசுபாலிகாம் நிப்ருதம் ஆருதத் பாலிகாம் ஆபாவ்ருத கவாடிகாம் பசுப வாடிகாம் ஆவிசந் பவந்தம் அயம் அர்ப்பயந் ப்ரஸவ தல்பகே தத் பதாத் வஹந் கபட கந்யகாம் ஸ்வபுரம் ஆகத: வேகத: प्रसुप्तपशुपालिकां निभृतमारुदद्बालिका - मपावृतकवाटिकां पशुपवाटिकामाविशन् । भवन्तमयमर्पयन् प्रसवतल्पके तत्पदा - द्वहन् कपटकन्यकां स्वपुरमागतो वेगतः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வஸுதேவர் கோகுலத்திற்குச் சென்றபோது (உனது மாயை மூலம்) அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். நந்தகோபர் வீட்டில் இருந்த மாயையான பெண் குழந்தை மெதுவாக அழுதது (வஸுதேவருக்கு வீட்டைக் காண்பிப்பது போல்). அந்த வீட்டின் கதவுகள் திறந்திருந்தன. நந்தகோபரின் வீட்டினுள் வஸுதேவர் சென்றார். யசோதையின் ப்ரஸவப் படுக்கையில் உன்னை வைத்தார். அந்தப் படுக்கையில் இருந்த மாயக் குழந்தையை எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்கு விரைவாக வந்தார்.