Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 396)

Dasaka 39 - மாயையும் கோகுலமும்

பவந்தமயமுத்வஹந் யதுகுலோத்வஹோ நிஸ்ஸரன் ததர்ச ககநோச்சலஜ்ஜலபராம் கலிந்தாத்மஜாம் அஹோ ஸலில ஸஞ்சய: ஸ புநரைந்த்ரஜாலோதிதோ ஜலௌக இவ தத்க்ஷணாத் ப்ரபதமேயதாமாயயௌ பவந்தம் அயம் உத்வஹந் யதுகுல உத்வஹ: நிஸ்ஸரன் ததர்ச ககந உச்சலத் ஜல பராம் கலிந்த ஆத்மஜாம் அஹோ ஸலில ஸஞ்சய: ஸ புந: இந்த்ரஜால உதிதோ ஜலௌக இவ தத் க்ஷணாத் ப்ரபத மேயதாம் ஆயயௌ भवन्तमयमुद्वहन् यदुकुलोद्वहो निस्सरन् ददर्श गगनोच्चलज्जलभरां कळिन्दात्मजाम् । अहि सलिलसञ्चयस्स पुनरैन्द्रजालोदितो जलौघ इव तत्क्षणात् प्रपदमेयतामाययौ

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! யது குலத்தில் உத்தமராக விளங்கிய வஸுதேவர் உன்னைத் தூக்கிக் கொண்டு வரும் வழியில், வானம் வரை உயரமாக எழுப்பும் அலைகளை உடைய யமுனை நதியைக் கண்டார். ஆயினும் அவர் அந்த நதியின் அருகில் சென்றதும் இந்திரஜாலம் போன்று, வெள்ள நீர் வடிந்து, அவர் கணுக்கால் அளவே வந்தது அல்லவா? என்ன வியப்பு.