Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 395)
Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
சேஷேண பூரிபணவாரித வாரிணாSத ஸ்வைரம் ப்ரதர்சிதபதோ மணிதீபிதேந த்வாம் தாரயந் ஸ கலு தந்யதம: ப்ரதஸ்தே ஸோSயம் த்வமீச மம நாசய ரோகவேகாந் சேஷேண பூரி பண வாரித வாரிணா அத ஸ்வைரம் ப்ரதர்சித பத: மணி தீபிதேந த்வாம் தாரயந் ஸ கலு தந்யதம: ப்ரதஸ்தே ஸ: அயம் த்வம் ஈச மம நாசய ரோக வேகாந் शेषेण भूरिफणवारितवारिणाऽथ स्वैरं प्रदर्शितपथो मणिदीपितेन । त्वां धारयन् स खलु धन्यतमः प्रतस्थे सोऽयं त्वमीश मम नाशय रोगवेगान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அளவற்ற புண்ணியம் செய்திருந்த வஸுதேவர் உன்னை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் (கோகுலத்திற்கு). அப்போது பெய்த மழையைக் குடைபோல் தனது படங்கள் மூலமாக ஆதிசேஷன் தடுத்தான். இரவு சூழ்ந்திருந்த அந்த வேளையில் தனது மாணிக்கம் மூலமாக பாதையைக் காண்பித்தான். உன்னுடன் தொடர்ந்து வந்தான். என்னுடைய பிணிகளை நீ நீக்க வேண்டும்.***