Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 394)
Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
ஜாதா ததா பசுபஸத்மநி யோகநித்ரா நித்ரா விமுத்ரிதமதாக்ருத பௌரலோகம் த்வத் ப்ரேரணாத் கிமிவ சித்ரமசேதநைர்யத் த்வாரை: ஸ்வயம் வ்யகடி ஸங்கடிதை: ஸுகாடம் ஜாதா ததா பசுப ஸத்மநி யோக நித்ரா நித்ரா விமுத்ரிதம் அத அக்ருத பௌர லோகம் த்வத் ப்ரேரணாத் கிம் இவ சித்ரம் அசேதநை: யத் த்வாரை: ஸ்வயம் வ்யகடி ஸங்கடிதை: ஸுகாடம் जाता तदा पशुपसद्मनि योगनिद्रा निद्राविमुद्रितमथाकृत पौरलोकम् । त्वत्प्रेरणात् किमिह चित्रमचेतनैर्यद् - द्वारैः स्वयं व्यघटि सङ्गटितैस्सुगाढम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய கட்டளையின்படி யோகமாயை நந்தகோபர் வசித்த கிராமத்தில் அவதரித்தாள். அங்கு உள்ள அனைவரும் அவளால் உறங்க வைக்கப்பட்டனர். கம்சனின் சிறையில் நீ இருந்த அறையின் வாயிலில் இருந்து பூட்டுகள் மற்றும் கதவுகள் தாமாகவே திறந்ததாமே! என்ன வியப்பு!