Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 393)

Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்

த்வத் ப்ரேரிதஸ்ததநு நந்த தநூஜயா தே வ்யத்யாஸமாரசயிதும் ஸ ஹி சூரஸூநு: த்வாம் ஹஸ்தயோரத்ருத சித்த விதார்யமார்யை: அம்போருஹஸ்த கலஹம்ஸ கிசோர ரம்யம் த்வத் ப்ரேரித: ததநு நந்த தநூஜயா தே வ்யத்யாஸம் ஆரசயிதும் ஸ ஹி சூரஸூநு: த்வாம் ஹஸ்தயோ: அத்ருத சித்த விதார்யம் ஆர்யை: அம்போருஹ ஸ்த கல ஹம்ஸ கிசோர ரம்யம் त्वत्प्रेरिस्ततदनु नन्दतनूजया ते व्यत्यासमारचयितुं स हि शूरसूनुः । त्वां हस्तयोरधृत चित्ताविधार्यमार्यै - रम्भोरुहस्थकळहंसकिशोररम्यम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் உன்னை நந்தகோபரின் இல்லத்தில் கொண்டு விடும்படி வஸுதேரை பணித்தாய். இதனால் யோகிகளாலும் தங்கள் மனதில் பதிக்கப்பட வேண்டியவரான வஸுதேவர், தாமரை மலரில் உறங்கும் அன்னத்தின் குஞ்சு போன்று அழகுடன் இருந்த உன்னை தனது கைகளில் எடுத்துக் கொண்டார்.