Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 392)

Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்

மாத்ரா ச நேத்ர ஸலிலாஸ்த்ருத காத்ரவல்யா ஸ்தோத்ரைரபிஷ்டுத குண: கருணாலயஸ்த்வம் ப்ராசீநஜந்ம யுகலம் ப்ரதிபோத்ய தாப்யாம் மாதுர்கிரா ததித மாநுஷ பால வேஷம் மாத்ரா ச நேத்ர ஸலில ஆஸ்த்ருத காத்ர வல்யா ஸ்தோத்ரை: அபிஷ்டுத குண: கருணாலய: த்வம் ப்ராசீந ஜந்ம யுகலம் ப்ரதிபோத்ய தாப்யாம் மாது: கிரா ததித மாநுஷ பால வேஷம் मात्रा च नेत्रसलिलास्तृतगात्रवल्ल्या स्तोत्रैरभिष्टुतगुणः करुणालयस्त्वम् । प्राचीनजन्मयुगळं प्रतिबोध्य ताभ्यां मातुर्गिरा दधिथ मानुषबालवेषम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஆனந்தக் கண்ணீரால் நனைந்த கொடி போன்ற உனது தாய் தேவகி உன்னைத் துதித்தாள். நீ உனது தாய் தந்தைக்கு அவர்களின் முந்தைய இரண்டு பிறவிகளைப் பற்றிக் கூறினாய். கருணையே உருவான நீ, உனது தாய் உன்னை வேண்டியவுடன் மனிதக் குழந்தையாக உருவம் கொண்டாய். (முந்தைய பிறவிகள்: அதிதி + காச்யபர்: ப்ருச்நி + ஸுதபஸ்)