Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 391)
Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
தேவ ப்ரஸீத பரபூருஷ தாபவல்லீ நிர்லூநதாத்ர ஸமநேத்ர கலாவிலாஸிந் கேதாநபாகுரு க்ருபாகுருபி: கடாக்ஷை: இத்யாதி தேந முதிதேந சிரம் நுதோSபூ: தேவ ப்ரஸீத பரபூருஷ தாபவல்லீ நிர்லூந தாத்ர ஸம நேத்ர கலா விலாஸிந் கேதாந் அபாகுரு க்ருபா குருபி: கடாக்ஷை: இத்யாதி தேந முதிதேந சிரம் நுதோ ஆபூ: देव प्रसीद परपूरुष तापवल्ली - निर्लूनदात्र समनेत्र कलाविलासिन् । खेदानपाकुरु कृपागुरुभिः कटाक्षै - रित्यादि तेन मुदितेन चिरं नुतोऽभूः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை வாஸுதேவர், “தேவனே! பரம புருஷனே! வேதனைகளான கொடிகளை அறுக்கும் வாள் போன்றவனே! அனைவரையும் ஆள்பவனே! உனது லீலைகள் மூலம் பெருமை பெற்றவனே! கருணை பொங்கும் உனது கடைக்கண் பார்வை மூலம் என் துயரங்களை நீக்க வேண்டும்”, என்று நீண்ட நேரம் துதித்தார்.