Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 390)

Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்

சௌரிஸ்து தீரமுநி மண்டல சேதஸோSபி தூரஸ்த்திதம் வபுருதீக்ஷ்ய நிஜேக்ஷணாப்யாம் ஆனந்தபாஷ்ப புலகோத்கம கதகதார்த்ர: துஷ்டாவ த்ருஷ்டி மகரந்த ரஸம் பவந்தம் சௌரி: து தீர முநி மண்டல சேதஸ: அபி தூரஸ்த்திதம் வபு: உதீக்ஷ்ய நிஜ ஈக்ஷணாப்யாம் ஆனந்த பாஷ்ப புலக உத்கம கதகத ஆர்த்ர: துஷ்டாவ த்ருஷ்டி மகரந்த ரஸம் பவந்தம் शौरिस्तु धीरमुनिमण्डलचेतसोऽपि दूरस्थितं वपुरुदीक्ष्य निजेक्षणाभ्याम् । आनन्दबाष्पपुळकोद्गमगद्गदार्द्र - स्तुष्टाव दृष्टिमकरन्दरसं भवन्तम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மிகுந்த ஞானிகளான முனிவர்கள் மனதிற்குக் கூட எட்டாத உனது திருமேனியை வஸுதேவர் தன் கண்களால் கண்டார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. மயிர்க்கூச்சல் அடைந்தார்; நெஞ்சம் தழுதழுத்தது. மிகுந்த அன்புடன், மகரந்த ரஸம் போன்று இருந்த உன்னைத் துதித்தார்.