Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 389)
Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
வக்ஷ: ஸ்தலீ ஸுகநிலீந விலாஸி லக்ஷ்மீ மந்தாக்ஷ லக்ஷித கடாக்ஷ விமோக்ஷ பேதை: தந்மந்திரஸ்ய கல கம்ஸ க்ருதாமலக்ஷ்மீம் உந்மார்ஜயந்நிவ விரேஜித வாஸுதேவ வக்ஷ: ஸ்தலீ ஸுக நிலீந விலாஸி லக்ஷ்மீ மந்த அக்ஷ லக்ஷித கடாக்ஷ விமோக்ஷ பேதை: தத் மந்திரஸ்ய கல கம்ஸ க்ருதாம் அலக்ஷ்மீம் உந்மார்ஜயந் இவ விரேஜித வாஸுதேவ वक्षःस्थलीसुखनिलानविलासिलक्ष्मी - मन्दाक्षलक्षितकटाक्षविमोक्षभेदैः । तन्मन्दिरस्य खलकंसकृतामलक्ष्मी - मुन्मार्जयन्निव विरेजिथ वासुदेव
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வாஸுதேவனே! உனது திருமார்பில் மிகவும் சுகமாக மஹாலக்ஷ்மி அமர்ந்திருந்தாள். அவளது கடைக்கண் பார்வை அந்த அறையின் மீது பட்டது. அந்த அறையில் இதுவரை கம்ஸனால் ஏற்பட்டிருந்த அலக்ஷ்மியின் ஆதித்தம் அகன்றது. இப்படியாக நீ மங்களகரமாக இருந்தாய்.