Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 387)
Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
ஆசாஸு சீதலதராஸு பயோததோயை: ஆசாஸிதாப்தி விவசேஷு ச ஸஜ்ஜநேஷு நைசாகரோதயவிதௌ நிசி மத்யமாயாம் க்லேசாபஹஸ்த்ரிஜகதாம் த்வமிஹாவிராஸீ: ஆசாஸு சீதலதராஸு பயோததோயை: ஆசாஸித ஆப்தி விவசேஷு ச ஸஜ்ஜநேஷு நைசாகர உதய விதௌ நிசி மத்யமாயாம் க்லேசாபஹ: த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ: आशासु शीतलतरासु पयोदतोयै - राशासिताप्तिविवशेषु च सज्जनेषु । नैशाकरोदयविधौ निशि मध्यमायां क्लेशापहस्त्रिजगतां त्वमिहाऽविरासीः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மழை பொழிந்து அனைத்து திசைகளிலும் நன்கு குளிர்ந்து இருந்தது. நல்லவர்கள் எண்ணம் அனைத்தும் கைகூடுவதால் அவர்கள் மகிழ்ந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில், நடு இரவில், சந்திரன் உதயமாகும்போது, இந்த உலகில் உள்ள துன்பங்களை நீக்குபவனாக நீ பூமியில் க்ருஷ்ணனாகத் தோன்றினாய் அல்லவா?