Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 386)
Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
ஆனந்த ரூப பகவந்நயி தேSவதாரே ப்ராப்தே ப்ரதீப்த பவதங்க நிரீயமாணை: காந்தி வ்ரஜைரிவ கநாகந மண்டலைர்த்யாம் ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா ஆனந்த ரூப பகவந் அயி தே அவதாரே ப்ராப்தே ப்ரதீப்த பவத் அங்க நிரீயமாணை: காந்தி வ்ரஜை: இவ கநாகந மண்டலை: த்யாம் ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா आनन्दरूप भगवन्नयि तेऽवतारे प्राप्ते प्रदीप्तभवदङ्ग निरीयमाणैः । कान्तिव्रजैरिव घनाघनमण्डलैर्द्या - मावृण्वती विरुरुचे किल वर्षवेला
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஆனந்த வடிவே! நீ பிறந்த நேரம் வந்தபோது, வானம் முழுவதும் மழை மேகங்களால் மூடப்பட்டு இருந்தன. உன்னுடைய நீல நிறமான மேனியில் தோன்றிய நிறத்தைப் போன்றே அவை இருந்தன.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-3-1 முதல் x-3-49 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.