Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 385)

Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்

ப்ராப்தே ஸப்தம கர்ப்பதாமஹிபதௌ த்வத் ப்ரேரணாந்மாயயா நீதே மாதவ ரோஹிணீம் த்வமபி போ: ஸச்சித்ஸுகைகாத்மக: தேவக்யா ஜடரம் விவேசித விபோ ஸம்ஸ்தூயமாந: ஸுரை: ஸ த்வம் க்ருஷ்ண விதூய ரோகபடலீம் பக்திம் பராம் தேஹி மே ப்ராப்தே ஸப்தம கர்ப்பதாம் அஹிபதௌ த்வத் ப்ரேரணாத் மாயயா நீதே மாதவ ரோஹிணீம் த்வம் அபி போ: ஸத் சித் ஸுக ஏக ஆத்மக: தேவக்யா ஜடரம் விவேசித விபோ ஸம்ஸ்தூயமாந: ஸுரை: ஸ த்வம் க்ருஷ்ண விதூய ரோக படலீம் பக்திம் பராம் தேஹி மே प्राप्ते सप्तमगर्भतामहिपतौ त्वत्प्रेरणान्मायया नीते माधव रोहिणीं त्वमपि भोस्सच्चित्सुखैकात्मकः । देवक्या जठरं विवेशिथ विभो संस्तूयमानस्सुरैः स त्वं कृष्ण विधूय रोगपटलीं भक्तिं परां देहि मे

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மாதவனே! தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் ஆதிசேஷன் தோன்ற, உன் கட்டளைப்படி அந்த கர்ப்பத்தை யோகமாயை ரோஹிணியின் வயிற்றில் சேர்த்தாள். ஆனந்தமே வடிவமாக உள்ள நீ, தேவகியின் கர்ப்பத்தில் நுழைந்தாய். உன்னைத் தேவர்கள் துதித்தனர் அல்லவா? இப்படியான செயல்கள் புரிந்த நீ, எனது பிணிகளை நீக்கி, உன்னிடத்தில் மிகுந்த பக்தி உண்டாக்க வேண்டும்.***