Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 384)

Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்

தாவத்த்வந் மநஸைவ நாரதமுநி: ப்ரோசே ஸ போஜேச்வரம் யூயம் நந்வஸுரா: ஸுராச்ச யாதவோ ஜாநாஸி கிம் ந ப்ரபோ மாயாவீ ஸ ஹரிர்பவத் வதக்ருதே பாவீ ஸுரப்ரார்த்தநாத் இத்யாகர்ண்ய யதூநதூதுநதஸௌ சௌரேச்ச ஸூநூநஹந் தாவத் த்வத் மநஸா ஏவ நாரத முநி: ப்ரோசே ஸ போஜேச்வரம் யூயம் நநு அஸுரா: ஸுரா: ச யாதவ: ஜாநாஸி கிம் ந ப்ரபோ மாயாவீ ஸ ஹரி: பவத் வத க்ருதே பாவீ ஸுர ப்ரார்த்தநாத் இதி ஆகர்ண்ய யதூந் அதூதுநத் அஸௌ சௌரே: ச ஸூநூந் அஹந் तावत्त्वन्मनसैव नारदमुनिः प्रोचे स भोजेश्वरं यूयं नन्वसुराः सुराश्च यदवो जानासि किं न प्रभो । मायावी स हरिर्भवद्वधकृते भावी सुरप्रार्थना - दित्याकर्ण्य यदूनदूधुनदसौ शौरेश्च सूनूनहन्

குருவாயூரப்பா! அந்த நேரம் உனது எண்ணத்தால் நாரதர் அங்கு வந்தார். அவர் கம்ஸனிடம், “ப்ரபுவே! நீ அசுரன் அல்லவா? யாதவர்கள் அனைவரும் தேவர்கள் அல்லவா? மாயாவியான மஹாவிஷ்ணு உன்னைக் கொல்லவே யாதவ குலத்தில் தோன்றப் போகிறான்”, என்றார். இதனைக் கேட்ட கம்ஸன், வஸுதேவரின் பிள்ளைகளைக் கொன்றான். யாதவர்களையும் விரட்டியடித்தான்.