Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 383)

Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்

க்ருஹ்ணாநச்சிகுரேஷு தாம் கலமதி: சௌரேச்சிரம் ஸாந்த்வநை: நோ முஞ்சந் புநராத்மஜார்ப்பணகிரா ப்ரீதோSத யாதோ க்ருஹாந் ஆத்யம் த்வத்ஸஹஜம் ததாSர்ப்பிதமபி ஸ்நேஹேந நாஹந்நஸௌ துஷ்டாநமபி தேவ புஷ்டகருணா த்ருஷ்டா ஹி தீரேகதா க்ருஹ்ணாந: சிகுரேஷு தாம் கலமதி: சௌரே: சிரம் ஸாந்த்வநை: நோ முஞ்சந் புந: ஆத்மஜ அர்ப்பண கிரா ப்ரீத: அத யாத: க்ருஹாந் ஆத்யம் த்வத் ஸஹஜம் ததா அர்ப்பிதம் அபி ஸ்நேஹேந ந அஹந் அஸௌ துஷ்டாநம் அபி தேவ புஷ்ட கருணா த்ருஷ்டா ஹி தீ: ஏகதா गृह्णानश्चिकुरेषु तां खलमतिः शौरेश्चिरं सान्त्वनैर्नो मुञ्चन् पुनरात्मजार्पणगिरा प्रीतोऽथ यातो गृहान् । आद्यं त्वत्सहजं तथार्पितमपि स्नेहेन नाहन्नसौ दुष्टानामपि देव पुष्टकरुणा दृष्टा हि धीरेकदा

குருவாயூரப்பா! அறிவற்ற கம்ஸன் தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். வஸுதேவர் சமாதானம் கூற முயன்றும் அவன் விடவில்லை. வஸுதேவர், தனக்குப் பிறக்கும் குழந்தைகளை அவனிடமே தருவதாகக் கூறினார். இதற்கு இணங்கிக் கம்ஸன் அவளை விடுத்தான். இதன்படி தனக்குப் பிறந்த முதல் குழந்தையை, உனது சகோதரனை, கம்ஸனிடம் அளித்தார். ஆயினும் மனம் இரங்கி அவன் அந்தக் குழந்தையைக் கொல்லவில்லை. சில நேரங்களில் கொடியவர்களுக்கு கருணை தோன்றுவது வியப்பே!