Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 382)
Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்
உத்வாஹாவஸிதௌ ததீயஸஹஜ: கம்ஸோSத ஸம்மாநயந் ஏதௌ ஸுததயா கத: பதி ரதே வ்யோமோத்தயா த்வத்கிரா அஸ்யாஸ்த்வாமதிதுஷ்டமஷ்டம ஸுதோ ஹந்தேதி ஹந்தேரித: ஸந்த்ராஸாத் ஸ து ஹந்துமந்திககதாம் தந்வீம் க்ருபாணீமதாத் உத்வாஹ் அவஸிதௌ ததீய ஸஹஜ: கம்ஸ: அத ஸம்மாநயந் ஏதௌ ஸுததயா கத: பதி ரதே வ்யோம உத்தயா த்வத் கிரா அஸ்யா: த்வாம் அதி துஷ்டம் அஷ்டம ஸுத: ஹந்தா இதி ஹந்த ஈரித: ஸந்த்ராஸாத் ஸ து ஹந்தும் அந்திககதாம் தந்வீம் க்ருபாணீம் அதாத் उद्वाहावसितौ तदीयसहजः कंसोऽथ सम्मानय - न्नेतौ सूततया गतः पथि रथे व्योमोत्थया त्वद्गिरा । अस्यास्त्वामतिदुष्टमष्टमसुतो हन्तेति हन्तेरितः सत्त्रासात्स तु हन्तुमन्तिकगतां तन्वीं कृपाणीमधात्
குருவாயூரப்பா! திருமணம் முடிந்த பின்னர் இருவரும் வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைக் கவுரப்படுத்தும் வகையில், தேவகியின் சகோதரனான கம்ஸன், தானே அவர்கள் தேரை ஓட்டிச் சென்றான். அந்த நேரம் வானத்தில் ஓர் அசரீரி, “மிகவும் கொடியவனான உன்னை இவர்களது எட்டாவது மகன் கொன்று விடுவான்”, என்று கேட்டது. இதனைக் கேட்ட கம்ஸன் பயத்துடனும், கோபத்துடனும் அருகில் இருந்த தேவகியைக் கொல்வதற்காகத் தனது கத்தியை எடுத்தான். கொடுமை!