Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 381)

Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்

ச்ருத்வா கர்ணரஸாயனம் தவ வச: ஸர்வேஷு நிர்வாபித ஸ்வாந்தேஷ்வீச கதேஷு தாவக க்ருபா பீயூஷ த்ருப்தாத்மஸு விக்யாதே மதுராபுரே கில பவத் ஸாந்நித்ய புண்யோத்தரே தந்யாம் தேவக நந்தநாமுதவஹத் ராஜா ஸ சூராத்மஜ: ச்ருத்வா கர்ண ரஸாயனம் தவ வச: ஸர்வேஷு நிர்வாபித ஸ்வாந்தேஷு ஈச கதேஷு தாவக க்ருபா பீயூஷ த்ருப்த ஆத்மஸு விக்யாதே மதுராபுரே கில பவத் ஸாந்நித்ய புண்ய உத்தரே தந்யாம் தேவக நந்தநாம் உதவஹத் ராஜா ஸ சூராத்மஜ: श्रुत्वा कर्णरसायनं तव वचः सर्वेषु निर्वापित - स्वान्तेष्वीश गतेषुइ तावककृपापीयूषतृप्तात्मसु । विख्याते मथुरापुरे किल भवत्सान्निध्यपुण्योत्तरे धन्यां देवकनन्दिनीमुदवहद्राजा स शूरात्मजः

குருவாயூரப்பா! காதுகளுக்கு இனிமை அளிப்பதான உனது சொற்களை (நான்முகன் மூலமாக) தேவர்கள் கேட்டனர். அவர்கள் மனதில் இருந்த சோகம் நீங்கியது. உனது கருணையால் மகிழ்வுடன் சென்றனர். உன்னுடைய ஸாந்நித்யத்தால் மிகவும் புண்ணியமாகவும் சிறப்புற்றும் விளங்கிய மதுராபுரியின் அரசனாக சூரஸேனன் என்பவன் இருந்தான். அவனுடைய மகன் தேவகனின் மகளான தேவகியை, வஸுதேவர் மணந்து கொண்டார் அல்லவா?