Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 380)
Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்
ஜாநே தீநதசாமஹம் திவிஷதாம் பூமேச்ச பீமைர்ந்ருபை: தத்க்ஷேபாய பவாமி யாதவகுலே ஸோSஹம் ஸமக்ராத்மநா தேவா வ்ருஷ்ணிகுலே பவந்து கலயா தேவாங்கநாச்சாவநௌ மத்ஸேவார்த்தம் இதி த்வதீயவசநம் பாதோஜபூரூசிவாந் ஜாநே தீந தசாம் அஹம் திவிஷதாம் பூமே: ச பீமை: ந்ருபை: தத் க்ஷேபாய பவாமி யாதவ குலே ஸ: அஹம் ஸமக்ர ஆத்மநா தேவா வ்ருஷ்ணிகுலே பவந்து கலயா தேவாங்கநா: ச அவநௌ மத் ஸேவா அர்த்தம் இதி த்வதீய வசநம் பாதோஜபூ: ஊசிவாந் जाने दीनदशामहं दिविषदां भूमेश्च भीमैर्नृपै - स्तत्क्षेपाय भवामि यादवकुले सोऽहं समग्रात्मना । देवा वृष्णिकुले भवन्तु कलया देवाङ्गनाश्चावनौ मत्सेवार्थमिति त्वदीयवचनं पाथोजभूरूचिवान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ கூறியதாக நான்முகன் உரைத்த சொற்கள் எனவென்றால்: அசுரர்களால் தேவர்களுக்கும் பூமிதேவிக்கும் உண்டாகிய துக்கத்தை நான் அறிவேன். இவர்களுடைய துயரங்களை நீக்குவதற்காக நான் யாதவகுலத்தில் என்னுடைய பரிபூர்ண உருவத்துடன் பிறப்பேன். தேவர்கள் வ்ருஷ்ணி குலத்தில் பிறப்பார்கள். தேவலோகப் பெண்கள் எனக்கு தொண்டு செய்வதற்காக அவர்களுடன் பூமியில் பிறப்பார்கள்.