Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 379)
Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்
தே முக்தாநிலசாலி துக்தஜலதேஸ்தீரம் கதா: ஸங்கதா யாவத் த்வத்பத சிந்தநைக மநஸஸ்தாவத் ஸ பரதோஜபூ: த்வத்வாசம் ஹ்ருதயே நிசம்ய ஸகலாநாநந்தயந்நூசிவாந் ஆக்யாத: பரமாத்மநா ஸ்வயமஹம் வாக்யம் ததாகர்ணயதாம் தே முக்த ஆநில சாலி துக்த ஜலதே: தீரம் கதா: ஸங்கதா யாவத் த்வத் பத சிந்தந ஏக மநஸ: தாவத் ஸ பரதோஜபூ: த்வத் வாசம் ஹ்ருதயே நிசம்ய ஸகலாந் ஆநந்தயந் ஊசிவாந் ஆக்யாத: பரமாத்மநா ஸ்வயம் அஹம் வாக்யம் தத் ஆகர்ணயதாம் ते मुग्धानिलशालि दुग्धजलधेस्तीरं गताः सङ्गता यावत्त्वत्पदचिन्तनैकमनसस्तावत् स पाथोजभूः । त्वद्वाचं हृदये निशम्य सकलानानन्दयन्नचिवा - नाख्यातः परमात्मना स्वयमहं वाक्यं तदाकर्ण्यताम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பின்னர் நான்முகன் மற்றும் சிவன் முதலானோர் இணைந்து, குளிர்வாகவும் மணம் வீசுவதாகவும் உள்ள காற்றைக் கொண்டுள்ள திருப்பாற்கடலை அடைந்தனர். அங்கு உன்னைத் த்யானித்தனர். அப்போது நீ நான்முகனுக்கு மாத்திரம் உனது உள்ளத்தில் தோன்றியதை அவன் உள்ளத்தில் தெரியச் செய்தாய். அவன் தேவர்களிடம் நீ கூறியதை கூறப் போவதாக உரைத்தான்.