Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 378)

Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்

ஊசே சாம்புஜ பூரமூநயி ஸுரா: ஸத்யம் தரித்ரியா வசோ நந்வஸ்யா பவதாம் ச ரக்ஷண விதௌ தக்ஷோ ஹி லக்ஷ்மீபதி: ஸர்வே சர்வபுரஸ்ஸரா வயமிதோ கத்வா பயோவாரிதிம் நத்வா தம் ஸ்துமஹே ஜவாதிதி யயு: ஸாகம் தவாகேதநம் ஊசே ச அம்புஜபூ: அமூந் அயி ஸுரா: ஸத்யம் தரித்ரியா வச: நநு அஸ்யா பவதாம் ச ரக்ஷண விதௌ தக்ஷ: ஹி லக்ஷ்மீபதி: ஸர்வே சர்வ புர: ஸரா வயம் இத: கத்வா ப: வாரிதிம் நத்வா தம் ஸ்துமஹே ஜவாத் இதி யயு: ஸாகம் தவ ஆகேதநம் ऊचे चाम्बुजभूरमूनयि सुराः सत्यं धरित्र्या वचो नन्वस्या भवतां च रक्षणविधौ दक्षो हि लक्ष्मीपतिः । सर्वे शर्वपुरस्सरा वयमितो गत्वा पयोवारिधिं नत्वा तं स्तुमहे जवादिति युयस्साकं तवाऽऽकेतनम्

குருவாயூரப்பா! நான்முகன் அவர்களிடம், “பூமிதேவி கூறியதை நான் உண்மை என்று ஞானப்பார்வை மூலம் அறிந்தேன். மஹாலக்ஷ்மியின் நாயகனான ஸ்ரீஹரி ஒருவன் மட்டுமே உங்களையும் பூமியையும் காக்க முடியும். சிவனையும் அழைத்துக் கொண்டு நாம் அனைவரும் விரைவாகத் திருப்பாற்கடல் செல்வோம். அங்கு அவனை வணங்குவோம்”, என்றான். பின்னர் அனைவருமாக உனது இடத்திற்கு வந்தனர் அல்லவா?