Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 377)
Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்
ஹா ஹா துர்ஜநபூரி பாரமதிதாம் பாதோ நிதௌ பாதுகாம் ஏதாம் பாலய ஹந்த மே விவசதாம் ஸம்ப்ருச்ச தேவாநிமாம் இத்யாதி ப்ரசுர ப்ரலாப விவசாமாலோக்ய தாதா மஹீம் தேவாநாம் வதநாநி வீக்ஷ்ய பரிதோ தத்யௌ பவந்தம் ஹரே ஹா ஹா துர்ஜந பூரி பார மதிதாம் பாதோ நிதௌ பாதுகாம் ஏதாம் பாலய ஹந்த மே விவசதாம் ஸம்ப்ருச்ச தேவாந் இமாம் இதி ஆதி ப்ரசுர ப்ரலாப விவசாம் ஆலோக்ய தாதா மஹீம் தேவாநாம் வதநாநி வீக்ஷ்ய பரித: தத்யௌ பவந்தம் ஹரே हा हा दुर्जनभूरिभारमथितां पाथोनिधौ पातुका - मेतां पालय हन्त मे विवशतां संपृच्छ देवानिमान् । इत्यादिप्रचुरप्रलापविवशामालोक्य धाता महीं देवानां वदनानि वीक्ष्य परितो दध्यौ भवन्तं हरे
குருவாயூரப்பா! பூதேவி நான்முகனிடம், “கஷ்டம்! கஷ்டம்! தீயவர்கள் பாரத்ததால் நான் துக்கப்படுகிறேன். இதனால் நான் துக்கம் என்ற கடலில் மூழ்குகிறேன். எனது இந்த அவல நிலையை நீங்கள் தேவர்களிடம் கேட்டு அறிந்து கொள்க!”, என்று கூறினாள். இதனைக் கேட்ட நான்முகன் அவள் நிலையையும், அங்கிருந்த தேவர்களையும் பார்த்தார். பின்னர் உன்னைத் த்யானிக்கத் தொடங்கினார்.