Sriman Narayaneeyam - Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம் (ச்லோகம் 376)
Dasaka 37 - ஸ்ரீக்ருஷ்ண அவதார காரணம்
ஸாந்த்ராநந்ததனோ ஹரே நநு புரா தைவாஸுரே ஸங்கரே த்வத்க்ருத்தா அபி கர்மசேஷ வசதோ யே தே ந யாதா கதிம் தேஷாம் பூதலஜந்மநாம் திதிபுவாம் பாரேண தூரார்திதா பூமி: ப்ராப விரிஞ்சமாச்ரிதபதம் தேவை: புரைவாகதை: ஸாந்த்ர ஆநந்த தநோ ஹரே நநு புரா தைவ அஸுரே ஸங்கரே த்வத் க்ருத்தா அபி கர்ம சேஷ வசத: யே தே ந யாதா கதிம் தேஷாம் பூதல ஜந்மநாம் திதிபுவாம் பாரேண தூரார்திதா பூமி: ப்ராப விரிஞ்சம் ஆச்ரித பதம் தேவை: புரா ஏவ ஆகதை: सान्द्राननन्दतनो हरे ननु पुरा दैवासुरे सङ्गरे त्वत्कृत्ता अपि कर्मशेषवशतो ये ते न याता गतिम् । तेषां भूतलजन्मनां दितिभुवां भारेण दुरार्दिता भूमिः प्राप विरिञ्चमाश्रितपदं देवैः पुरैवागतैः
ஆனந்தமே வடிவமாக நிற்பவனே! குருவாயூரப்பா! முன்னர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில், உனது அடியவர்களான தேவர்களைக் காப்பாற்ற, பல அசுரர்களை நீ வதம் செய்தாய். அப்படி உன்னால் வெல்லப்பட்ட அசுரர்கள் மோட்சம் பெற்றனர். ஆனால் காலநேமி போன்ற அசுரர்களுக்கு பாவ புண்ணியங்கள் மீதம் இருந்தன. இதனால் அவர்கள் பூமியில் மீண்டும் பிறந்தனர். இவர்கள் போன்று அசுரர்களின் பாரம் தாங்காமல் பூதேவி வருந்தயபடி நான்முகனிடம் முறையிடச் சென்றாள். ஆனால் அதற்கு முன்பாகவே தேவர்கள் அங்கே இருந்தனர். (உன்னை வேண்டினர்).விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-1 மற்றும் x-2 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.