Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 375)
Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்
ந்யஸ்யாஸ்த்ராணி மஹேந்த்ர பூப்ருதி தபஸ்தந்வந் புநர்மஜ்ஜிதாம் கோகர்ணாவதி ஸாகரேண தரணீம் த்ருஷ்ட்வார்த்திதஸ்தாபஸை: த்யாதேஷ்வாஸத்ருதாநலாஸ்த்ர சகிதம் ஸிந்தும் ஸ்ருவக்ஷேபணாத் உத்ஸார்யோத் த்ருத கேரளோ ப்ருகுபதே வாதேச ஸம்ரக்ஷமாம் ந்யஸ்ய அஸ்த்ராணி மஹேந்த்ர பூப்ருதி தப: தந்வந் புந: மஜ்ஜிதாம் கோகர்ண அவதி ஸாகரேண தரணீம் த்ருஷ்ட்வா அர்த்தித: தாபஸை: த்யாத இஷ்வாஸ த்ருத அநல அஸ்த்ர சகிதம் ஸிந்தும் ஸ்ருவ க்ஷேபணாத் உத்ஸார்ய உத்த்ருத கேரள: ப்ருகுபதே வாதேச ஸம்ரக்ஷ மாம் न्यस्यास्त्राणि महेन्द्रभूभृति तपस्तन्वन् तपनर्मज्जितां गोकर्णावधि सागरेण धरणीं दृष्ट्वाऽर्थितस्तापसैः । ध्यातेष्वासघृतानलास्त्रचकितं सिन्धुं सृवक्षेपणा - दुत्सार्योद्धृतकेरळो भृगुपते वातेश संरक्ष माम्
ப்ருகு குலத்தவனே! குருவாயூரப்பா! உனது அஸ்திரங்கள் அனைத்தையும் மஹேந்திர மலையில் வைத்துவிட்டுத் தவம் புரிந்தாய். அந்த நேரம் கோகர்ணம் என்ற பகுதி வரை உள்ள பூமி, நிலத்தில் மூழ்குவதாக உன்னிடம் முனிவர்கள் வேண்டினர். பின்னர் த்யானத்தின் மூலம் ஆக்நேய அஸ்த்ரத்தைத் தொடுத்தாய். இதனைக் கண்டு ஸமுத்திரராஜன் பயந்து நடுங்கினான். நீ ஸ்ருவம் என்ற பாத்திரத்தை எறிந்தாய். அந்தப் பாத்திரம் விழும் இடம் வரை உள்ள ஸமுத்திரத்தை பின்வாங்கச் செய்தாய். இதன் மூலம் கேரள நாட்டை மூழ்காமல் காத்தாய். என்னையும் காக்க வேண்டும்.***