Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 374)
Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்
தாதோஜ்ஜீவநக்ருந் ந்ருபாலககுலம் த்ரிஸ்ஸப்த க்ருத்வோ ஜயந் ஸந்தர்ப்யாத ஸமந்தபஞ்சக மஹாரக்த ஹ்ருதௌகே பித்ரூந் யஜ்ஞே க்ஷமாமபி காச்யபாதிஷு திசந் ஸால்வேந யுத்யந் புந: க்ருஷ்ணோSமும் நிஹநிஷ்யதீதி சமிதோ யுத்தாத் குமாரைர்பவாந் தாத உஜ்ஜீவநக்ருத் ந்ருபாலக குலம் த்ரி: ஸப்த க்ருத்வோ ஜயந் ஸந்தர்ப்ய அத ஸமந்த பஞ்சக மஹாரக்த ஹ்ருதௌகே பித்ரூந் யஜ்ஞே க்ஷமாம் அபி காச்யப ஆதிஷு திசந் ஸால்வேந யுத்யந் புந: க்ருஷ்ண: அமும் நிஹநிஷ்யதி இதி சமித: யுத்தாத் குமாரை: பவாந் तातोज्जीवनकृन्नृपालककुलं त्रिस्सप्तकृत्वो जयन् सन्तर्प्याथ समन्तपञ्चकमहारक्तहृदौधे पितॄन् । यज्ञे क्ष्मामपि काश्यपादिषु दिशन् साल्वेन युध्यन् पुनः कृष्णोऽमुं निहनिष्यतीति शमितो युद्धात् कुमारैर्भवान्
குருவாயூரப்பனே! உனது தந்தையின் உயிரை மீண்டும் மீட்டாய். இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரிய குலத்தை அழித்தாய். பின்னர் ஸமந்தபஞ்சகம் என்ற இடத்தில் பெரிய மடுவில் உனது பித்ருகளுக்குத் தர்ப்பணம் செய்தாய். பின்னர் யாகத்தில் காச்யபர் முதலான முனிவர்களுக்கு நிலங்களை அளித்தாய். ஸால்வன் என்ற மன்னனுடன் யுத்தம் செய்தாய். ஸனத்குமாரர் மூலமாக, ஸால்வனைக் க்ருஷணன் கொல்லப்போகிறான் என்று உணர்ந்து அவனை விட்டாய்.