Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 373)

Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்

பூயோSமர்ஷித ஹேஹயாத்மஜ கணைஸ்தாதே ஹதே ரேணுகாம் ஆக்நாநாம் ஹ்ருதயம் நிரீக்ஷ்ய பஹுசோ கோராம் ப்ரதிஜ்ஞாம் வஹந் த்யாநாநீத ரதாயுதஸ்த்வமக்ருதா விப்ரத்ருஹ: க்ஷத்ரியாந் திக்சக்ரேஷு குடாரயந் விசிகயந் நி: க்ஷத்ரியாம் மேதிநீம் பூய: அமர்ஷித ஹேஹய ஆத்மஜ கணை: தாதே ஹதே ரேணுகாம் ஆக்நாநாம் ஹ்ருதயம் நிரீக்ஷ்ய பஹுச: கோராம் ப்ரதிஜ்ஞாம் வஹந் த்யாந் ஆநீத ரத ஆயுத: த்வம் அக்ருதா விப்ர த்ருஹ: க்ஷத்ரியாந் திக் சக்ரேஷு குடாரயந் விசிகயந் நி: க்ஷத்ரியாம் மேதிநீம் भूयोऽमर्षितहेहयात्मजगणैस्ताते हते रेणुका - माघ्नानां हृदयं निरीक्ष्य बहुशो घोरां प्रतिज्ञां वहन् । ध्यानानीतरथायुधस्त्वमकृथा विप्रद्रुहः क्षत्रियान् दिक्चक्रेषु कुठारयन्विशिखयन् निःक्षात्रियां मेदिनीम्

குருவாயூரப்பா! இதனால் கோபம் கொண்ட கார்த்தவீர்யனின் மகன்கள் உனது தந்தையைக் கொன்றனர். இதனால் உனது தாய் ரேணுகாதேவி இருபத்தோரு முறை மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். அதனைக் கண்ட நீ மனம் பொறுக்காமல் இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரியர்களைக் கொல்வதாகச் சபதம் பூண்டாய். த்யானத்தின் மூலமாக தேரையும், வில் அம்புகளையும் பெற்றாய். எங்கும் உள்ள ப்ராமணர்களின் துவேஹிகளான க்ஷத்ரியர்களைக் கொன்றாய். இதனால் இந்தப் பூமியில் க்ஷத்ரியர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கினாய்.