Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 372)
Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்
லீலாவாரித நர்மதாஜல வலல்லங்கேச கர்வாபஹ ஸ்ரீமத்பாஹு ஸஹஸ்ரமுக்த பஹுசஸ்த்ராஸ்த்ரம் நிருந்தந்நமும் சக்ரே த்வய்யத வைஷ்ணவேSபி விபலே புத்த்வா ஹரிம் த்வாம் முதா த்யாயந்தம் சித ஸர்வ தோஷமவதீ: ஸோSகாத் பரம் தே பதம் லீலா வாரித நர்மதா ஜல வலத் லங்கேச கர்வ அபஹ ஸ்ரீமத் பாஹு ஸஹஸ்ரம் உக்த பஹு சஸ்த்ர அஸ்த்ரம் நிருந்தந் அமும் சக்ரே த்வயி அத வைஷ்ணவே அபி விடலே புத்த்வா ஹரிம் த்வாம் முதா த்யாயந்தம் சித ஸர்வ தோஷம் அவதீ: ஸ: அகாத் பரம் தே பதம் लीलावारितनर्मदाजलवलल्लङ्केशगर्वापह - श्रीमद्बाहुसहस्रमुक्तबहुशस्त्रास्त्रं निरुन्धन्नमुम् । चक्रे त्वय्यथ वैष्णवेऽपि विकले बुध्वा हरिं त्वां मुदा ध्यायन्तं छितस्र्वदोषमवधीः सोऽगात् परं ते पदम्
குருவாயூரப்பா! ஒருமுறை கார்த்தவீர்யன் பொழுது போக்குவதற்காகத் தனது ஆயிரம் கைகளைக் கொண்டு நர்மதை ஆற்றின் ஓட்டத்தையே நிறுத்தினான். இதனால் இராவணனின் கர்வத்தை அவன் அடக்கினான். அவன் உன் மீது தனது ஆயிரம் கைகளாலும் ஏவிய அஸ்திரங்களைத் தடுத்தாய். அவன் உன் மீது எறிந்த விஷ்ணு சக்ரமும் பயனில்லாமல் போனது. இதன் மூலம் நீ விஷ்ணு என்று அவன் உணர்ந்தான். உன்னைத் த்யானிக்கத் தொடங்கினான். இதன் மூலம் அவனைப் பீடித்திருந்தத் தோஷங்கள் நீங்கின. அவனை நீ வதம் செய்தவுடன் ஸ்ரீவைகுண்டம் அடைந்தான்.