Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 370)

Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்

சுக்ரோஜ்ஜீவித தாதவாக்ய சலித க்ரோதோSத ஸக்யா ஸமம் விப்ரத் த்யாத மஹோதரோபநிஹிதம் சாபம் குடாரம் சராந் ஆரூட: ஸஹவாஹயந்த்ருகரதம் மாஹிஷ்மதீமாவிசந் வாக்பிர்வத்ஸமதாசுஷி க்ஷிதிபதௌ ஸம்ப்ராஸ்துதா: ஸங்கரம் சுக்ர உஜ்ஜீவித தாத வாக்ய சலித க்ரோத: அத ஸக்யா ஸமம் விப்ரத் த்யாத மஹோதர உபநிஹிதம் சாபம் குடாரம் சராந் ஆரூட: ஸஹ வாஹ யந்த்ருக ரதம் மாஹிஷ்மதீம் ஆவிசந் வாக்பி: வத்ஸம் அதாசுஷி க்ஷிதிபதௌ ஸம்ப்ராஸ்துதா: ஸங்கரம் शुक्रोज्जीविततातवाक्यचलितक्रोधोऽथ सख्या समं बिभ्रुद्ध्यातमहोदरोपनिहितं चापं कुठारं शरन् । आरूढस्सहवाहयन्तृकरथं माहिष्मतीमाविशन् वाग्भिर्वत्समदाशुषि क्षितिपतौ सम्प्रास्तुथास्सङ्गरम्

குருவாயூரப்பா! உனது தந்தையின் உயிரை சுக்ராச்சாரியார் மீட்டார். உனது தந்தையிடம் நடந்ததைக் கேட்டாய். உடனே சிவனிடம் ப்ரார்த்தனை செய்தாய். அப்போது தோன்றிய மஹோதரன் என்ற சிவதூதன் கொடுத்த கோடாரி, வில், அம்பு, குதிரை, தேர் ஆகியவற்றை ஏற்றாய். உனது நண்பரான அக்ருதவ்ரணருடன் மாஹிஷ்மதி என்ற நாட்டிற்குச் சென்றாய். காமதேனுவைத் திரும்பத் தரும்படி கேட்டாய். தர மறுத்ததால் யுத்தம் தொடங்கினாய்.