Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 369)
Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்
ஆகேடோபகதோSர்ஜுந: ஸுரகவீ ஸம்ப்ராத ஸம்பத்கணை: த்வத்பித்ரா பரிபூஜித: புரகதோ துர்மந்த்ரி வாசா புந: காம் க்ரேதும் ஸசிவம் ந்யயுங்க்த குதியா தே நாபி ருந்தந் முநி ப்ராணக்ஷேப ஸரோஷ கோஹத சமூ சக்ரேண வத்ஸோ ஹ்ருத: ஆகேட உபகத: அர்ஜுந: ஸுரகவீ ஸம்ப்ராத ஸம்பத்கணை: த்வத் பித்ரா பரிபூஜித: புர கத: துர்மந்த்ரி வாசா புந: காம் க்ரேதும் ஸசிவம் ந்யயுங்க்த குதியா தேந அபி ருந்தந் முநி ப்ராண க்ஷேப ஸரோஷ கோ ஹத சமூ சக்ரேண வத்ஸ: ஹ்ருத: आखेटेपगतोऽर्जुनः सुरगवीसम्प्राप्तसम्पद्गणै - स्त्वत्पित्रा परिपूजितः पुरगतो दुर्मन्त्रिवाचा पुनः । गां क्रेतुं सचिवं न्ययुङ्क्त कुधिया तेनापि रुन्धन्मुनि - प्राणक्षेपसरोषगोहतचमूचक्रेण वत्सो हृतः
குருவாயூரப்பா! ஒருநாள் கார்த்தவீர்யார்ஜுனன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். பின்னர் உன் ஆசிரமத்திற்கு வந்தான். உன் தந்தை காமதேனு மூலமாகக் கிடைத்தவற்றை அவனுக்கு அளித்தார். அவன் நாட்டிற்குத் திரும்பியவுடன், தனது மந்திரியின் தகாத உபதேசங்களால் காமதேனுவை விலைக்கு வாங்க விருப்பம் கொண்டான். அதற்காகத் தனது படைகளையும் மந்திரி ஒருவனையும் அனுப்பினான். உனது தந்தை சம்மதிக்காமல் போகவே மந்திரி உனது தந்தையை கொன்றான். இதனைக் கண்டு கோபம் கொண்ட காமதேனு அந்தப் படைகளைத் தாக்கி அழித்தது. இருப்பினும் காமதேனுவை அவன் கைப்பற்றினான்.