Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 368)

Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்

பித்ரா மாத்ருமுதே ஸ்தவாஹ்ருத வியத்தேநோர்நிஜாதாச்ரமாத் ப்ரஸ்தாயாத ப்ருகோர்கிரா ஹிமகிராவாராத்ய கௌரீபதிம் லப்த்வா தத்பரசும் ததுக்த தநுஜச்சேதீ மஹாஸ்த்ராதிகம் ப்ராப்தோ மித்ரமதாக்ருதவ்ரண முநிம் ப்ராப்யாகம: ஸ்வாச்ரமம் பித்ரா மாத்ருமுதே ஸ்தவ ஆஹ்ருத வியத் தேநோ: நிஜாத் ஆச்ரமாத் ப்ரஸ்தாய அத ப்ருகோ: கிரா ஹிமகிடௌ ஆராத்ய கௌரீபதிம் லப்த்வா தத் பரசும் தத் உக்த தநுஜ சேதீ மஹா அஸ்த்ராதிகம் ப்ராப்த: மித்ரம் அத அக்ருதவ்ரண முநிம் ப்ராப்ய அகம: ஸ்வ ஆச்ரமம் पित्रा मातृमुदे स्तवाहृतवियद्धेनोर्निजादाश्रमात् प्रस्थायाथ भृगोर्गिरा हिमगिरावाराध्य गौरीपतिम् । लब्ध्वा तत्परशुं तदुक्तदनुजच्छेदी महास्त्रादिकं प्राप्तो मित्रमथाकृतवृअणमुनिं प्राप्यागमः स्वाश्रमम्

குருவாயூரப்பா! உனது தாயாரின் மகிழ்வுக்காக, உனது தந்தையால் மந்திரங்கள் மூலமாகக் காமதேனு (தேவலோகப் பசு) அந்த ஆசிரமத்திற்கு வரவழைக்கப்பட்டது. உனது பாட்டனார் கூறியபடி நீ இமயமலைக்குச் சென்று சிவனைக் குறித்துத் தவம் இயற்றினாய். அவரும் உன் முன்னால் தோன்றி பரசு என்னும் ஆயுதத்தை உனக்கு அளித்தார். அவர் கூறியபடி அசுரன் ஒருவனை அழித்தாய். மேலும் அங்கு இருந்த அக்ருதவ்ரணர் என்ற முனிவரை நண்பராக அடைந்தாய். மீண்டும் உன் இருப்பிடம் வந்தாய்.