Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 367)
Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்
லப்தாம்நாய கணச்சதுர்தசவயா கந்தர்வராஜே மநாக் ஆஸக்தாம் கில மாதரம் ப்ரதி பிது: க்ரோதாகுலஸ்யாஜ்ஞயா தாதாஜ்ஞாதிகஸோதரை: ஸமமிமாம் சித்வாSத சாந்தாத் பிது: தேஷாம் ஜீவநயோகமாபித வரம் மாதா ச தேSதாத்வராந் லப்த ஆம்நாயகண: சதுர்தச வயா கந்தர்வராஜே மநாக் ஆஸக்தாம் கில மாதரம் ப்ரதி பிது: க்ரோத ஆகுலஸ்ய ஆஜ்ஞயா தாத ஆஜ்ஞாதிக ஸோதரை: ஸமம் இமாம் சித்வா அத சாந்தாத் பிது: தேஷாம் ஜீவந யோகம் ஆபித வரம் மாதா ச தே அதாத் வராந் लब्धाम्नायगणश्चतुर्दशवयाः गन्धर्वराजे मना - गासक्तां किल मातरं प्रति पितुः क्रोधाकुलस्याज्ञया । ताताज्ञातिगसोदरैः सममिमां छित्वाऽथ शान्तात् पितु - स्तेषां जीवनयोगमापिथ वरं माता च तेऽदाद्वरन्
குருவாயூரப்பா! உனது பதினான்காவது வயதில் அனைத்து வேத பாடங்களையும் கற்றாய். ஒரு நாள் ஒரு கந்தர்வனிடம் உனது தாய் ரேணுகாதேவி சிறிது மனம் சஞ்சலம் கொண்டு விட்டாள். இதனால் உனது தந்தை கோபம் கொண்டார். உனது சகோதரர்களிடம் உனது தாயைக் கொன்று விடுமாறு உத்தரவிட்டார். அவர்கள் அப்படிச் செய்யவில்லை. உன்னிடம் அவர்களையும் தாயையும் கொன்றுவிடுமாறு உத்தர விட்டார். நீயும் அப்படியே செய்தாய். இதனால் மகிழ்வு கொண்ட உன் தந்தை உன்னை ஏதாவது வரம் கேட்கும்படி கூறினார். நீயும், கொல்லப்பட்ட அனைவரும் உயிர் பிழைக்க வேண்டும் என்று வரம் வேண்டவே, அவர்களும் பிழைத்தனர். உனது தாயார் மகிழ்வுடன் உனக்கு வரம் அளித்தாள் அல்லவா?