Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 366)
Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்
ஸத்யம் கர்த்துமதார்ஜுநஸ்ய ச வரம் தச்சக்தி மாத்ராநதம் ப்ரஹ்மத்வேஷி ததாகிலம் ந்ருபகுலம் ஹந்துஞ்ச பூமேர்பரம் ஸஞ்ஜாதோ ஜமதக்நிதோ ப்ருகுகுலே த்வம் ரேணுகாயாம் ஹரே ராமோ நாம ததாத்மஜேஷ்வரஜ: பித்ரோரதா: ஸம்மதம் ஸத்யம் கர்த்தும் அத அர்ஜுநஸ்ய ச வரம் தத் சக்தி மாத்ரா நதம் ப்ரஹ்மத்வேஷி தத் அகிலம் ந்ருபகுலம் ஹந்தும் ச பூமே: பரம் ஸஞ்ஜாத: ஜமதக்நித: ப்ருகுகுலே த்வம் ரேணுகாயாம் ஹரே ராம: நாம தத் ஆத்மஜேஷு அவரஜ: பித்ரோ: அதா: ஸம்மதம் सत्यं कर्तुमथार्जुनस्य च वरं तच्छक्तिमात्रानतं ब्रह्मद्वेषि तदाखिलं नृपकुलं हन्तुं च भूमेर्भरम् । सञ्जातो जमदग्नितो भृगुकुले त्वं रेणुकायां हरे रामो नाम तदात्मजेष्ववरजः पित्रोरधास्सम्मदम्
குருவாயூரப்பா! உனது கைகளால்தான் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு மரணம் என்பதை உண்மை ஆக்குவதற்காகவும், அவனுக்குப் பயந்து அந்தணர்களைத் தூஷிக்கின்ற அரசர்கள் பூமிக்குப் பாரமாக உள்ளனர் என்றும் நீ எண்ணினாய். அந்த அரச குலங்களை அழிப்பதற்கும் நீ முடிவு செய்தாய். ப்ருகு முனிவரின் குலத்தில் உதித்த ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும், அவர்கள் கடைசி மகனாக நீ பிறந்தாய். பரசுராமன் என்று பெயர் கொண்டு, உன் பெற்றோர்களை மகிழ வைத்தாய்.