Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 365)

Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்

அத்ரே: புத்ரதயா புரா த்வமநஸூயாயாம் ஹி தத்தாபிதோ ஜாத: சிஷ்ய நிபந்த தந்த்ரித மநா: ஸ்வஸ்த்தச்சரந் காந்தயா த்ருஷ்டோ பக்ததமேந ஹேஹய மஹீபாலேந தஸ்மை வராந் அஷ்டைச்வர்ய முகாந் ப்ரதாய ததித ஸ்வேநைவ சாந்தே வதம் அத்ரே: புத்ரதயா புரா த்வம் அநஸூயாயாம் ஹி தத்த அபித: ஜாத: சிஷ்ய நிபந்த தந்த்ரித மநா: ஸ்வஸ்த: சரந் காந்தயா த்ருஷ்டோ பக்ததமேந ஹேஹய மஹீபாலேந தஸ்மை வராந் அஷ்ட ஐச்வர்ய முகாந் ப்ரதாய ததித ஸ்வேந ஏவ ச அந்தே வதம் अत्रेः पुत्रतया पुरा त्वमनसूयायां हि दत्ताभिधो जातः शिष्यानिषन्धतन्द्रितमनास्स्वस्थश्चरन् कान्तया । दृष्टो भक्ततमेन हेहयमहीपालेन तस्मै वरा - नष्टैश्वर्यमुखान्प्रदाय ददिथ स्वेनैव चान्ते वधम्

குருவாயூரப்பா! முன்பு ஒரு சமயம் அத்ரி முனிவருக்கும் அநஸூயா என்னும் அவர் மனைவிக்கும், தத்தர் என்னும் பெயர் கொண்டவனாகப் பிறந்தாய் அல்லவா? பல சீடர்கள் உன்னை அணுகவே, அவர்களின் தொடர்பு உன் த்யானத்திற்கு இடையூறாக உள்ளது என்று எண்ணி, உனது மனைவியுடன் பல இடங்களில் திரிந்தாய். சிறந்த பக்திமானாகிய ஹேஹய நாட்டு மன்னன் கார்த்தவீர்யார்ஜுனன் உன்னை வணங்கினான். உன்னிடம் இருந்து எட்டு வகையான செல்வங்களைப் பெற்றான். அவனை யமனால் கொல்ல முடியாது என்பதால், நீ மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்று வரம் பெற்றான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் ix-15 மற்றும் ix-16 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.