Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 364)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
ஸோSயம் மர்த்யாவதாரஸ்தவ கலு நியதம் மர்த்ய சிக்ஷார்த்த மேவம் விச்லேக்ஷார்த்திர்நிராகஸ்த்யஜநமபி பவேத் காமதர்மாதி ஸக்த்யா நோ சேத் ஸ்வாத்மாநுபூதே: க்வ நு தவ மனஸோ விக்ரியா சக்ரபாணே ஸ த்வம் ஸத்வைகமூர்த்தே பவனபுரபதே வ்யாதுனு வ்யாதிதாபாந் ஸ: அயம் மர்த்ய அவதார: தவ கலு நியதம் மர்த்ய சிக்ஷா அர்த்தம் ஏவம் விச்லேக்ஷ ஆர்த்தி: நிராக: த்யஜநம் அபி பவேத் காம தர்ம அதிஸக்த்யா நோ சேத் ஸ்வாத்ம அநூபூதே: க்வ நு தவ மனஸ: விக்ரியா சக்ரபாணே ஸ த்வம் ஸத்வ ஏக மூர்த்தே பவனபுரபதே வ்யாதுனு வ்யாதி தாபாந் सोऽयं मर्त्यावतारस्तव खलु नियतं मर्त्यशिक्षार्थमेवं विश्लेषार्तिर्निरागस्त्यजनमपि भवेत् कामधर्मातिसक्त्या । नो चेत् स्वात्मानुभूतेः क्वनु तव मनसो विक्रिया चक्रपाणे स त्वं सत्त्वैकमूर्ते पवनपुरपते व्याधुनु व्याधितापान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது இந்த மனித அவதாரம் பல படிப்பினைகளைக் கூறுவதற்கே ஆகும். அவையாவன - அன்பானவர்களைப் பிரிந்தால் துக்கம் உண்டாகும்: காமமும் தர்மமும் பற்று அதிகரித்தால் த்யாகத்தில் கொண்டு சேர்த்து விடும். சக்கரத்தைக் கைகளில் கொண்டவனே! பரிசுத்த ரூபனே! மாறுதல்கள் அற்றவனே! எனது வ்யாதிகளை நீ தீர்க்க வேண்டும்.***