Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 363)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
வால்மீகேஸ்த்வத்ஸுதோத்காபித மதுரக்ருதே: ஆஜ்ஞயா யஜ்ஞவாடே ஸீதாம் த்வய்யாப்துகாமே க்ஷிதிமவிசத் அஸௌ த்வம் ச காலார்த்திதோSபூ: ஹேதா: ஸௌமித்ரிகாதீ ஸ்வயமத ஸரயூ மக்ந நிச்சேஷ ப்ருத்யை: ஸாகம் நாகம் ப்ரயாதோ நிஜபதமகமோ தேவ வைகுண்ட மாத்யம் வால்மீகே: த்வத் ஸுத உத்காபித மதுர க்ருதே: ஆஜ்ஞயா யஜ்ஞவாடே ஸீதாம் த்வயி ஆப்துகாமே க்ஷிதிம் அவிசத் அஸௌ த்வம் ச கால ஆர்த்தித: அபூ: ஹேதா: ஸௌமித்ரி காதீ ஸ்வயம் அத ஸரயூ மக்ந நிச்சேஷ ப்ருத்யை: ஸாகம் நாகம் ப்ரயாத: நிஜ பதம் அகம: தேவ வைகுண்டம் ஆத்யம் वाल्मीकेस्त्वत्सुतोद्गापितमधुरकृतेराज्ञया यज्ञवाटे सीतां त्वय्याप्तुकामे क्षितिमविशदसौ त्वं च कालार्थितोऽभूः । हेतोस्सौमित्रिघाती स्वयमथ सरयूमग्ननिश्शेषभृत्यैः साकं नाकं प्रयातो निजपदमगमो देव वैकुण्ठमाद्यम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! யாகசாலைக்கு வந்த உனது இரண்டு மகன்களும், வால்மீகி முனிவரின் கட்டளையை ஏற்று இராமாயணத்தை மிகவும் இனிமையாகப் பாடினார்கள். நீ சீதையை ஏற்கச் சம்மதித்தாய். ஆனால் அப்போது சீதை இந்தப் பூமியின் உள்ளே சென்று மறைந்தாள். நீயும் யமனால் ஸ்ரீவைகுண்டம் செல்லும்படி வேண்டப்பட்டாய். ஒரு காரணத்திற்காக நீயே உனது தம்பியான இலட்சுமணனைத் துறந்து அவனுடைய இறப்பிற்குக் காரணமானாய். பின்னர் உனது சுற்றத்தாருடன் (அவர்கள் சரயு நதியில் மூழ்கினர்) உனது இடமான ஸ்ரீவைகுண்டம் சென்று அடைந்தாய்.