Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 362)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
ப்ரீதோ திவ்யாபிஷேகை: அயுதஸமதிகாந் வத்ஸராந் பர்யரம்ஸீ: மைதில்யாம் பாபவாசா சிவ சிவ கில தாம் கர்ப்பிணீமப்யஹாஸீ: சத்ருக்னேநார்தயித்வா லவண நிசிசரம் ப்ரார்தய: சூத்ரபாசம் தாவத் வால்மீகி கேஹே க்ருவஸதி: உபாஸூத ஸீதா ஸுதௌ தே ப்ரீத: திவ்ய அபிஷேகை: அயுத ஸம அதிகாந் வத்ஸராந் பர்யரம்ஸீ: மைதில்யாம் பாப வாசா சிவ சிவ கில தாம் கர்ப்பிணீம் அப்யஹாஸீ: சத்ருக்னேன அர்தயித்வா லவண நிசிசரம் ப்ரார்தய: சூத்ரபாசம் தாவத் வால்மீகி கேஹே க்ருவஸதி: உபாஸூத ஸீதா ஸுதௌ தே प्रीतो दिव्याभिषेकैरयुतसमधिकान् वत्सरान् पर्यरंसी - र्मैथिल्यां पापवाचा शिव ! शिव ! किल तां गर्भिणीमभ्यहासीः । शत्रुघ्नेनार्दयित्वा लवणनिशिचरं प्रार्दयः शूद्रपाशं तावद्वाल्मीकिगेहे कृतवसतिरुपासूत सीता सुतौ ते
குருவாயூரப்பா! உன்னுடைய பட்டாபிஷேகம் மிகவும் திவ்யமாக நடந்தது. அதனால் மகிழ்வுற்ற நீ பல வருடம் சுகமாக வாழ்ந்தாய். சீதையைக் குறித்து படிப்பே இல்லாத ஒருவன் கூறிய பாபமான பேச்சைக் கேட்டு, கர்ப்பமாக இருந்த அவளைத் துறந்தாய். இது என்ன கஷ்டம்! கஷ்டம்! சத்ருக்னன், லவணன் என்ற அசுரனைக் கொன்றான். சம்பூகன் என்பவன் தகாத காரியம் செய்ய முயன்றபோது நீ அவனைக் கொன்றாய். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வசித்து வந்த சீதை இரண்டு மகன்களைப் பெற்றாள் அல்லவா?