Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 361)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
க்ருஹ்ணன் ஜம்பாரி ஸம்ப்ரேஷித ரதகவசௌ ராவணேநாபியுத்யந் ப்ரஹ்மாஸ்த்ரேணாஸ்ய பிந்தந் கலததிம் அபலாமக்னிசுத்தாம் ப்ரக்ருண்ஹந் தேவச்ரேணீவரோஜ் ஜீவித ஸமர ம்ருதை: அக்ஷதை: ருக்ஷஸங்கை: லங்காபர்த்ரா ச ஸாகம் நிஜ நகரமகா: ஸப்ரிய: புஷ்பகேண க்ருஹ்ணன் ஜம்பாரி ஸம்ப்ரேஷித ரத கவசௌ ராவணேன அபியுத்யந் ப்ரஹ்மாஸ்த்ரேண அஸ்ய பிந்தந் கலததிம் அபலாம் அக்னிஸுத்தாம் ப்ரக்ருண்ஹந் தேவ ச்ரேணீவர உஜ் ஜீவித ஸமர ம்ருதை: அக்ஷதை: ருக்ஷஸங்கை: லங்கா பர்த்ரா ச ஸாகம் நிஜ நகரம் அகா: ஸப்ரிய: புஷ்பகேண गृह्णन् जम्भारिसम्प्रेषितरथकवचौ रावणेनाभियुध्यन् ब्रह्मास्त्रेणास्य भिन्दन् गळततिमबलामग्निशुद्धां प्रगृह्णन् । देव श्रेणीवरोज्जीवितसमरमृतैरक्षतैरृक्षसङ्घै - र्लङ्काभर्त्रा च साकं निजनगरमगास्सप्रियः पुष्पकेण
குருவாயூரப்பா! இந்திரன் உனக்குத் தேரையும் கவசத்தையும் அளித்தான். இவற்றை ஏற்ற நீ இராவணனுடன் யுத்தம் செய்தாய். அப்போது ப்ரம்மாஸ்திரம் மூலம் அவனது பத்துத் தலைகளையும் வெட்டினாய். அக்னிப் ப்ரவேசம் செய்த பரிசுத்தமான உனது மனைவியான சீதையை ஏற்றாய். தேவர்களின் உதவியால், உயிர் நீத்த அனைத்து வானரக் கூட்டமும் உயிர் பெற்றது. அவர்களுடனும், இலங்கையின் அதிபதியான விபீஷணனோடும், இலட்சுமணனோடும் புஷ்பக விமானம் ஏறிய நீ உனது நகரமான அயோத்திக்குச் சென்றாய்.