Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 360)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
ஸௌமித்ரிஸ்தவத்ர சக்திப்ரஹ்ருதி கலதஸுர்வாத ஜாநீத சைல க்ராணாத் ப்ராணாநுபேத: வ்யக்ருணுத குஸ்ருதிச்லாகிநம் மேகநாதம் மாயா க்ஷோபேஷு வைபீஷண வசந ஹ்ருத ஸ்தம்பந: கும்பகர்ணம் ஸம்ப்ராப்தம் கம்பிதோர்வீதலமகில சமூ பக்ஷிணம் வ்யக்ஷிணோஸ்த்வம் ஸௌமித்ரி: து அத்ர சக்தி ப்ரஹ்ருதி கலத் அஸு: வாதஜ ஆநீத சைல க்ராணாத் ப்ராணாந் உபேத: வ்யக்ருணுத குஸ்ருதி: லாகிநம் மேகநாதம் மாயா க்ஷோபேஷு வைபீஷண வசந ஹ்ருத ஸ்தம்பந: கும்பகர்ணம் ஸம்ப்ராப்தம் கம்பித உர்வீதலம் அகில சமூ பக்ஷிணம் வ்யக்ஷிணோ: த்வம் सौमित्रिस्त्वत्र शक्तिप्रहृतिगळदसुर्वातजानीतशैल - घ्राणात् प्रणानुपेतो व्यकृणुत कुसृतिश्लाघिनं मेघनादम् । मायाक्षोभेषु वैभीषणवचनहृतस्तम्भनः कुम्भकर्णं सम्प्राप्तं कम्पितोर्वीतलमखिलचमूभक्षिणं व्यक्षिणोस्त्वम्
குருவாயூரப்பா! சக்தி ஆயுதம் தாக்கியதால் இலட்சுமணன் மயக்கம் அடைந்து வீழ்ந்தான். உடனே அனுமனால் கொண்டு வரப்பட்ட ஸஞ்ஜீவினீ என்ற மலையில் உள்ள மூலிகையால் மயக்கம் தெளிந்தான். தனது மாய வித்தைகளால் கர்வம் கொண்டிருந்த இந்திரஜித்தை இலட்சுமணன் வீழ்த்தினான். நீ அந்தப் போரில் உண்டான மாயைகள் மூலம் கலக்கம் அடைந்தாய். ஆயினும் விபீஷணனின் வார்த்தைகள் மூலம் உனது மனக்கவலை நீங்கியது. அப்போது இந்தப் பூமியே அதிர்ந்து நடுக்கம் கொள்ளும்படியும், அனைத்துப் படைகளையும் உண்பவனும் ஆகிய கும்பகர்ணன் உன்னை நோக்கி வந்தபோது அவனைக் கொன்றாய்.