Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 359)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
கீசைராசாந்தரோ பாஹ்ருத கிரிநிகரை: ஸேதுமாதாப்ய யாதோ யதூந்யாமர்த்ய தம்ஷ்டராநக சிகரி சிலா ஸாலசஸ்த்ரை: ஸ்வஸைன்யை: வ்யாகுர்வந் ஸாநுஜஸ்த்வம் ஸமரபுவி பரம் விக்ரமம் சக்ரஜேத்ரா வேகாந்நாகாஸ்த்ரபத்த: பதகபதிகருந் மாருதைர்மோசிதோSபூ: கீசை: ஆசாந்தர அபாஹ்ருத கிரிநிகரை: ஸேதும் ஆதாப்ய யாத: யதூநி ஆமர்த்ய தம்ஷ்டரா நக சிகரி சிலா ஸால சஸ்த்ரை: ஸ்வஸைந்யை: வ்யாகுர்வந் ஸாநுஜ: த்வம் ஸமர புவி பரம் விக்ரமம் சக்ரஜேத்ரா வேகாத் நாகாஸ்த்ர பத்த: பதகபதி கருத் மாருதை: மோசித: அபூ: कीशैराशान्तरोपाहृतगिरिनिकरैस्सेतुमाधाप्य यातो यातून्यामर्द्य दंष्ट्रानखशिखरिशिलासालशस्त्रैः स्वसैन्यैः । व्याकुर्वन् सानुजस्त्वं समरभुवि परं विक्रमं शक्रजेत्रा वेगान्नागास्त्रबद्धः पतगपतिगरुन्मारुतैर्मोचितोऽभूः
குருவாயூரப்பா! அனைத்து வானரங்களும் பல திசைகளில் இருந்தும் மலைகளைக் குவியல்களாகக் கொண்டு வந்தனர். அதனால் அணையைக் கட்டினாய். அதன் மூலம் இலங்கையை அடைந்தாய். அங்கு சென்று, பற்கள், நகங்கள், மலைகள், கற்கள் போன்றவற்றை மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டிருந்த உனது படைகளின் உதவியால் அசுரர்களை அழித்தாய். உனது தம்பியுடன் இணைந்து சிறந்த முறையில் போர் புரிந்தாய். அப்போது இந்திரஜித் கொடுத்த நாகாஸ்திரத்தால் கட்டப்பட்டாய். பின்னர் கருடனின் சிறகின் காற்று உன் மீது படவே மீண்டும் எழுந்தாய்.