Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 358)

Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2

த்வம் ஸுக்ரிவாங்கதாதி ப்ரபல கபிசமூசக்ர விக்ராந்த பூமீ சக்ரோSபிக்ரம்ய பாரே ஜலதி நிசிசரேந்த்ராநுஜாச்ரீயமாண: தத்ப்ரோக்தாம் சத்ருவார்த்தாம் ரஹஸி நிசமயந் ப்ரார்த்தநா பார்த்யரோஷ ப்ராஸ்தாக்நேயாஸ்த்ர தேஜஸ்த்ரஸத் உததிகிரா லப்தவாந் மத்ய மார்கம் த்வம் ஸுக்ரிவ அங்கத ஆதி ப்ரபல கபி சமூ சக்ர விக்ராந்த பூமீ சக்ர: அபிக்ரம்ய பாரே ஜலதி நிசிசரேந்த்ர அநுஜ ஆச்ரீயமாண: தத் ப்ரோக்தாம் சத்ரு வார்த்தாம் ரஹஸி நிசமயந் ப்ரார்த்தநா ஆபார்த்ய ரோஷ ப்ராஸ்த ஆக்நேய அஸ்த்ர தேஜ: த்ரஸத் உததி கிரா லப்தவாந் மத்ய மார்கம் त्वं सुग्रीवाङ्गदादिप्रबलकपिचमूचक्रविक्रान्तभूमी - चक्रोऽभिक्रम्य पारेजलधि निशिचरेन्द्रानुजाश्रीयमाणः । तत्प्रोक्तां शत्रुवार्तां रहसि निशमयन्प्रार्थनापार्थ्यरोष - प्रास्ताग्नेयास्त्रतेजस्त्रसदुदधिगिरा लब्धवान् मध्यमार्गम्

குருவாயூரப்பா! சுக்ரீவன், அங்கதன் போன்ற பலம் மிகுந்த வானர வீரர்களுடன் நீ, வானரக் கூட்டம் முழுவதுமாக ஆக்கிரமித்தபடி நின்ற இடத்திற்கு வந்தாய். அந்த சமுத்திரத்தின் கரையில் இராவணனின் தம்பியான விபீஷணன் உன்னிடம் தஞ்சம் புகுந்தான். அவன் உன்னிடம் எதிரிகளைப் பற்றி விரிவாகக் கூறினான். உன்னுடைய தாழ்மையான வேண்டுகோளை கேட்டும் ஸமுத்திரராஜன் அமைதியுடன் இருக்கவே நீ கோபம் கொண்டு ஆக்னேயாஸ்த்ரத்தை விடத் தயாரானாய். உடனே பயந்து போன ஸமுத்திரராஜன் உன்னிடம் வந்தான். அவன் கூறியபடி கடலின் நடுவே வழியை அமைத்தாய்.