Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 357)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
த்வத்வார்த்தா கர்ணநோத்யத்கருதுரு ஜவஸம்பாதி ஸம்பாதி வாக்ய ப்ரோத்தீர்ணார்ணோதிரந்தர் நகரி ஜனகஜாம் வீக்ஷ்ய தத்வாங்குலீயம் ப்ரக்ஷுத்யோத்யாநமக்ஷ க்ஷபண சணரண: ஸோடபந்தோ தசாஸ்யம் த்ருஷ்ட்வா ப்லுஷ்டவா ச லங்காம் ஜடிதி ஸ ஹனுமான் மௌலிரத்நம் ததௌ தே த்வத் வார்த்தா கர்ணந உத்யத் கருத் உரு ஜவ ஸம்பாதி ஸம்பாதி வாக்ய ப்ரோத்தீர்ண அணோதி: அந்தர்நகரி ஜனகஜாம் வீக்ஷ்ய தத்வா அங்குலீயம் ப்ரக்ஷுத்ய உத்யாநம் அக்ஷ க்ஷபண சண ரண: ஸோட பந்த: தச ஆஸ்யம் த்ருஷ்ட்வா ப்லுஷ்டவா ச லங்காம் ஜடிதி ஸ ஹனுமான் மௌலிரத்நம் ததௌ தே त्वद्वार्ताकर्णनोद्यद्गरुदुरुजवसम्पातिसम्पातिवाक्य - प्रोत्तीर्णार्णोधिरन्तर्नगरि जनकजां वीक्ष्य दत्त्वाऽङ्गुलीयम् । प्रक्षुद्योद्यानमक्षक्षपणचणरणः सोढबन्धो दशास्यं दृष्ट्वा प्लुष्ट्वा च लङ्कां झटिति स हनुमान्मौलिरत्नं ददौ ते
குருவாயூரப்பா! உனது சரிதத்தைக் கேட்டவுடன் ஸம்பாதிக்கு சிறகுகள் முளைத்தன. அவர் சற்றே மேலே பறந்தார். அங்கிருந்து சீதையைக் கண்டார். அவருடைய சொற்களைக் கேட்ட அனுமனும் கடலைத் தாண்டிச் சென்றான். அங்கு இருந்த இலங்கையின் நடுவில் ஜனகனின் மகளான சீதையைக் கண்டான். உனது மோதிரத்தைச் சீதையிடம் அளித்தான். அசோகவனத்தையே அழித்தான். தடுக்க வந்த அட்சய குமாரனைக் கொன்றான். பின்னர் (இந்திரஜித் தொடுத்த) ப்ரம்மாஸ்த்திரத்திற்குக் கட்டுப்பட்டான். இராவணனையும் கண்டான். இலங்கையை எரித்தான். பின்னர் விரைவாக உன்னிடம் வந்த (சீதை அளித்த) சூடாமணியைக் கொடுத்தான் அல்லவா?