Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 356)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
ஸுக்ரீவேணாநுஜோக்த்யா ஸபயமபியதா வ்யூஹிதாம் வாஹிநீம் தாம் ருக்ஷாணாம் வீக்ஷ்ய திக்ஷு த்ருதமத தயிதா மார்கணாயாவநம்ராம் ஸந்தேசம் சாங்குலீயம் பவநஸுதகரே ப்ராதிசோ மோதசாலீ மார்கே மார்கே மமார்கே கபிபிரபி ததா த்வத்ப்ரியா ஸப்ரயாஸை: ஸுக்ரீவேண அநுஜ உக்த்யா ஸபயம் அபியதா வ்யூஹிதாம் வாஹிநீம் தாம் ருக்ஷாணாம் வீக்ஷ்ய திக்ஷு த்ருதம் அத தயிதா மார்கணாய அவநம்ராம் ஸந்தேசம் ச அங்குலீயம் பவநஸுத கரே ப்ராதிச: மோதசாலீ மார்கே மார்கே மமார்கே கபிபி: அபி ததா த்வத் ப்ரியா ஸப்ரயாஸை: सुग्रीवेणानुजोक्त्या सभयमभियता व्यूहितां वाहिनीं तामृक्षाणां वीक्ष्य दिक्षु द्रुतमथ दयितामार्गणायावनम्राम् । सन्देशञ्चाङ्गुलीयं पवनसुतकरे प्रादिशो मोदशाली मार्गे मार्गे ममार्गे कपिभिरपि तदी त्वत्प्रिया सप्रयासैः
குருவாயூரப்பனே! அதன் பின்னர் உனது தம்பி இலட்சுமணனின் சொற்களுக்கு இணங்க, அச்சத்துடன் உன்னிடம் சுக்ரீவன் வந்தான். அவனது படைகள் உனது துணைவியான சீதையைத் தேடுவதற்காக அணியாக நின்றன. இதனைக் கண்ட நீ மிகுந்த மகிழ்வு கொண்டாய். அதன் பின்னர், அனுமனின் கைகளில் உனது மோதிரத்தையும் செய்தியையும் அளித்தாய். உடனே, வானர வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் அனைத்து வழிகளிலும் உனது பிரியமான சீதையைத் தேடினர்.