Sriman Narayaneeyam - Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2 (ச்லோகம் 355)
Dasaka 35 - ஸ்ரீராமன் அவதாரம் - 2
நீதஸ்ஸுக்ரீவமைத்ரீம் ததநு ஹனுமதா துந்துபே: காயமுச்சை: க்ஷிப்த்வாங்குஷ்டேந பூயோ லுலுவித யுகபத் பத்ரிணா ஸப்த ஸாலாந் ஹத்வா ஸுக்ரீவ காதோத்யதமதுலபலம் வாலிநம் வ்யாஜவ்ருத்யா வர்ஷாவேலாமநைஷீர்விரஹதரலித: த்வம் மதங்காச்ரமாந்தே நீத: ஸுக்ரீவ மைத்ரீம் தத் அநு ஹனுமதா துந்துபே: காயம் உச்சை: க்ஷிப்த்வா அங்குஷ்டேந பூய: லுலுவித யுகபத் பத்ரிணா ஸப்த ஸாலாந் ஹத்வா ஸுக்ரீவ காத உத்யதம் அதுல பலம் வாலிநம் வ்யாஜவ்ருத்யா வர்ஷா வேலாம் அநைஷீ: விரஹ தரலித: த்வம் மதங்க ஆச்ரம அந்தே नीतस्सुग्रीवमैत्रीं तदनु हनुमता दुन्दुभेः कायमुच्चैः क्षिप्त्वाङ्गुष्ठेन भूयो लुलविथ युगपत्पत्रिणा सप्त सालान् । हत्वा सुग्रीवघातोद्यतमतुलबलं वालिनं व्याजवृत्त्या वर्षावेलामनैषीर्विरहतरळितस्त्वं मतङ्गाश्रमान्ते
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் அனுமன் மூலமாக சுக்ரீவனின் நட்பை நீ பெற்றாய். துந்துபி என்ற அசுரனின் உடலை உனது கால்கட்டை விரலால் மட்டுமே உயரமாகத் தூக்கி எறிந்து வெகுதூரம் சென்று விழும்படி செய்தாய். ஒரே அம்பினால் ஏழு மரங்களை வீழ்த்தினாய். மிக அதிகமான வலிமை உடையவனும், சுக்ரீவனைக் கொல்ல எண்ணியவனும் ஆகிய வாலியைத் தந்திரமாகக் கொன்றாய். சீதையைப் பிரிந்த துக்கம் தாள முடியாமல் நீ மதங்க முனிவரின் ஆச்ரமத்தில் மழைக் காலத்தை கழித்தாய் அல்லவா?