Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 354)
Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1
பூயஸ்தந்வீம் விசிந்வந்நஹ்ருத தசமுகஸ்த்வத் வதூம் மத்வதேநே இத்யுக்த்வா யாதே ஜடாயௌ திவமத ஸுஹ்ருத: ப்ராதனோ: ப்ரேத கார்யம் க்ருண்ஹாநம் தம் கபந்தம் ஜகநித சபரீம் ப்ரேக்ஷ்ய பம்பாதடே த்வம் ஸம்ப்ராப்தோ வாதஸூநும் ப்ருசமுதிதமநா: பாஹி வாதாலயேச பூய: தந்வீம் விசிந்வந் அஹ்ருத தசமுக: த்வத் வதூம் மத் வதேந இதி உக்த்வா யாதே ஜடாயௌ திவம் அத ஸுஹ்ருத: ப்ராதனோ: ப்ரேத கார்யம் க்ருண்ஹாநம் தம் கபந்தம் ஜகநித சபரீம் ப்ரேக்ஷ்ய பம்பாதடே த்வம் ஸம்ப்ராப்த: வாதஸூநும் ப்ருசமுதிதமநா: பாஹி வாதாலயேச भूयस्तन्वीं विचिन्वन्नहृत दशमुखस्त्वद्वधूं मद्वधेने - त्युक्त्वा याते जटायौ दिवमथ सुहृदः प्रातनोः प्रेतकार्यम् । गृह्णानं तं कबन्धं जघनिथ शबरीं प्रेक्ष्य पम्पातटे त्वं सम्प्राप्तो वातसूनुं भृशमुदितमनाः पाहि वातालयेश !
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது மனைவியைத் தேடிச் செல்லும் வழியில் ஜடாயுவைக் கண்டாய். ஜடாயு உன்னிடம், “இராவணன் என்னைத் தாக்கிவிட்டு உனது மனைவியை தூக்கிச் சென்றான்”, என்று கூறினார். அதன் பின்னர் அவர் இறந்தார். நண்பனான ஜடாயுவிற்கு வேண்டிய ஈமக்காரியங்களை நீ செய்தாய். வழியில் உன்னைப் பிடித்த கபந்தனை அழித்தாய். பம்பையின் நதிக்கரையில் சபரியைக் கண்டாய். அதன் பின்னர் அனுமனைச் சந்தித்தாய்; மிகவும் மகிழ்வு கொண்டாய். இத்தனை செயல்களைப் புரிந்தவனே! என்னைக் காக்க வேண்டும்.***