Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 353)

Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1

ஸோதர்யா ப்ரோக்த வார்த்தா விவச தசமுகா திஷ்ட மாரீசமாயா ஸாரங்கம் ஸாரஸாக்ஷ்யா ஸ்ப்ருஹிதம் அநுகத: ப்ராவதீர்பாணாகாதம் தந்மாயாக்ரந்த நிர்யாபித பவதநுஜாம் ராவணஸ்தாமஹார்ஷீத் தேநார்த்தோSபி த்வமந்த: கிமபி முதமதாஸ்தத்வ தோபாய லாபாத் ஸோதர்யா ப்ரோக்த வார்த்தா விவச தசமுக ஆதிஷ்ட மாரீச மாயா ஸாரங்கம் ஸாரஸாக்ஷ்யா ஸ்ப்ருஹிதம் அநுகத: ப்ராவதீ: பாண காதம் தத் மாயா க்ரந்த நிர்யாபித பவத் அநுஜாம் ராவண: தாம் அஹார்ஷீத் தேந ஆர்த்த: அபி த்வம் அந்த: கிம் அபி முதம் அதா: தத் வத உபாய லாபாத் सोदर्या प्रोक्तवार्ताविवशदशमुखादिष्टमारीचमाया - सारङ्गं सारसाक्ष्या स्पृहितमनुगतः प्रावधीर्बाणघातम् । तन्मायाक्रन्दनिर्यापितभवदनुजां रावणस्तामहार्षीत् तेनार्तोऽपि त्वमन्तः किमपि मुदमधास्तद्वधोपायायलाभात्

குருவாயூரப்பா! தனது சகோதரியான சூர்ப்பனகையின் சொற்களைக் கேட்ட இராவணன் கோபம் கொண்டான். அவனது தூண்டுதலால் மாரீசன் மாயமானாக வந்தான். தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடைய சீதை அதனை விரும்பினாள். நீ அதனை தொடர்ந்து சென்று அம்புகளால் கொன்றாய். அப்போது அந்த மாரீசன் மாயக் குரல் எழுப்பினான். இதனைக் கேட்டு பயந்த சீதை உனது தம்பியான இலட்சுமணனை உன்னிடம் அனுப்பினாள். அப்போது அந்த சீதையை இராவணன் அபகரித்தான். இதனால் நீ வெளியில் துன்பம் கொண்ட போதிலும், மனதில் இராவணனைக் கொல்ல உபாயம் கிடைத்தது என்று மகிழ்ந்தாய் அல்லவா?