Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 352)
Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1
ப்ராப்தாயா: சூர்ப்பணக்யா மதன சலத்ருதே: அர்த்தனைர்நிஸ்ஸஹாத்மா தாம் ஸௌமித்ரௌ விஸ்ருஜ்ய ப்ரபலதமருஷா தேந நிர்லூந நாஸாம் த்ருஷ்ட்வைநாம் ருஷ்டசித்தம் கரம் அபிபதிதம் தூஷணம் ச த்ரிமூர்த்தம் வ்யாஹிம்ஸீராசராநப்யயுத ஸமதிகாந் தத்க்ஷணாதக்ஷதோஷ்மா ப்ராப்தாயா: சூர்ப்பணக்யா மதன சல த்ருதே: அர்த்தனை: நிஸ்ஸஹாத்மா தாம் ஸௌமித்ரௌ விஸ்ருஜ்ய ப்ரபலதம ருஷா தேந நிர்லூந நாஸாம் த்ருஷ்ட்வா ஏநாம் ருஷ்ட சித்தம் கரம் அபிபதிதம் தூஷணம் ச த்ரிமூர்த்தம் வ்யாஹிம்ஸீ: ஆசராந் அபி அயுதஸம அதிகாந் தத் க்ஷணாத் அக்ஷத ஊஷ்மா प्राप्तायाः शूर्पणख्या मदनचलधृतेरर्थनैर्निस्सहात्मा तां सौमित्रौ विसृज्य प्रबलतमरुषा तेन निर्लुननासाम् । दृष्ट्वैनां रुष्टचित्तं खरमभिपतितं दुषणं च त्रिमूर्धं व्याहिंसीराशरानप्ययुतसमधिकांस्तत्क्षणादक्षतोष्मा
குருவாயூரப்பா! உன்னிடம் காமம் கொண்டு சூர்ப்பனகை என்ற அரக்கி உனக்கு அருகாமையில் வந்தாள். அவளுடைய வேண்டுகோளை ஏற்காமல் அவளை இலட்சுமணனிடம் அனுப்பினாய். மிகவும் கோபம் கொண்ட இலட்சுமணன் அவள் மூக்கை அறுக்க, அதனால் மிகுந்த சினம் கொண்டாள். அவளது நிலைமையைக் கண்டு பொறுக்காமல் கரன், தூஷணன், த்ரிசிரஸ் போன்றவர்களும், மேலும் பதினாயிரத்திற்கு மேற்பட்ட அசுரர்களும் உன்னை நோக்கி வந்தனர். அவர்களை உனது மங்காத வீரத்தால் அதே நேரத்தில் கொன்றாய்.