Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 351)

Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1

நத்வாSகஸ்த்யம் ஸமஸ்தாசரநிகர ஸபத்ராக்ருதிம் தாபஸேப்ய: ப்ரத்யச்ரௌஷீ: ப்ரியைஷீ ததநு ச முநிநா வைஷ்ணவே திவ்யசாபே ப்ரஹ்மாஸ்த்ரே சாபி தத்தே பதிபித்ரு ஸுஹ்ருதம் வீக்ஷ்ய பூயோ ஜடாயும் மோதாத் கோதா தடாந்தே பரிரமஸி புரா பஞ்சவட்யாம் வதூட்யா நத்வா அகஸ்த்யம் ஸமஸ்த ஆசர நிகர ஸபத்ராக்ருதிம் தாபஸேப்ய: ப்ரத்யச்ரௌஷீ: ப்ரியைஷீ ததநு ச முநிநா வைஷ்ணவே திவ்ய சாபே ப்ரஹ்மாஸ்த்ரே ச அபி தத்தே பதி பித்ரு ஸுஹ்ருதம் வீக்ஷ்ய பூய: ஜடாயும் மோதாத் கோதா தடாந்தே பரிரமஸி புரா பஞ்சவட்யாம் வதூட்யா नत्वाऽगस्त्यं समस्ताशरनिकरसपत्राकृतिं तापसेभ्यः प्रत्यश्रौषीः प्रियैषी तदनु च मुनिना वैष्णवे दिव्यचापे । ब्रह्मास्त्रे चापि दत्ते पथि पितृसुहृदं दीक्ष्य भूयो जटायुं मोदाद् गोदातटान्ते परिरमसि पुरा पञ्चवट्यां वधूट्या

குருவாயூரப்பா! முனிவர்களின் நன்மைகளை முன்னிட்டு அனைத்து அசுரர்களையும் அழிப்பதாக உறுதி பூண்டாய். அகத்திய முனிவரைக் கண்டாய். அவர் மூலமாக விஷ்ணுவின் சிறந்த வில்லும், ப்ரஹ்மாஸ்திரமும் வழங்கப் பெற்றாய். அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில் உனது தந்தையின் நண்பரான ஜடாயுவைப் பார்த்து மகிழ்ந்தாய். பின்னர் கோதாவரி நதியின் கரையில் உள்ள பஞ்சவடி என்ற இடத்தில் உனது மனைவியுடன் இன்பமாக வாழ்ந்தாய்.