Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 350)
Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1
ச்ருத்வா புத்ரார்த்திகிந்நம் கலு பரத முகாத் ஸ்வர்கயாதம் ஸ்வதாதம் தப்தோ தத்வாSம்பு தஸ்மை நிததித பரதே பாதுகாம் மேதிநீம் ச அத்ரிம் நத்வாSத கத்வா வனமதி விபுலம் தண்டகம் சண்டகாயம் ஹத்வா தைத்யம் விராதம் ஸுகதிம் அகலயச்சாரு போ: சாரபங்கீம் ச்ருத்வா புத்ர ஆர்த்தி கிந்நம் கலு பரத முகாத் ஸ்வர்க யாதம் ஸ்வ தாதம் தப்த: தத்வா அம்பு தஸ்மை நிததித பரதே பாதுகாம் மேதிநீம் ச அத்ரிம் நத்வா அத கத்வா வனமதி விபுலம் தண்டகம் சண்டகாயம் ஹத்வா தைத்யம் விராதம் ஸுகதிம் அகலய: சாரு போ: சாரபங்கீம் श्रुत्वा पुत्रार्तिखिन्नं खलु भरतमुखात् स्वर्गयातं स्वतातं तप्तो दत्त्वाऽम्बु तस्मै निदधिथ भरते पादुकां मेदिनीं च । अत्रिं नत्वाऽथ गत्वा वनमतिविपुलां दण्डकां चण्डकायं हत्वा दैत्यं विराधं सुगतिमकलयश्चारु भोश्शारभङ्गीम्
குருவாயூரப்பா! உனது தந்தை புத்திர சோகம் தாங்காமல் மரணம் அடைந்தார் என்ற செய்தியை பரதன் மூலமாகக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தாய். தந்தைக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் செய்தாய். பரதனிடம் உனது பாதுகைகளையும், இராஜ்ஜியத்தையும் அளித்தாய். பின்னர் அத்ரி முனிவரின் ஆசிரமம் சென்று வணங்கினாய். அதன் பிறகு, மிகவும் பெரியதான தண்டகாரண்யம் என்ற காட்டை அடைந்தாய். அங்கு வசித்து வந்த விராதன் என்ற பெயர் வடிவம் கொண்ட அசுரனை அழித்தாய். பின்னர் சரபங்க முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று, அவருக்கு மோட்சம் அளித்தாய்.