Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 349)
Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1
தாதோக்த்யா யாதுகாமோ வனமநுஜ வதூஸம்யுதச்சாபதார: பௌராநாருத்ய மார்கே குஹநிலயகத: த்வம் ஜடாசீரதாரீ நாவா ஸந்தீர்ய கங்காமதிபதவி புந: த்வம் பாரத்வாஜமாராத் நத்வா தத்வாக்ய ஹோதோரதிஸுகம் அவஸச்சித்ரகூடே கிரீந்த்ரே தாத உக்த்யா யாதுகாம: வனம் அநுஜ வதூ ஸம்யுத: சாப தார: பௌராந் ஆருத்ய மார்கே குஹ நிலய கத: த்வம் ஜடா சீர தாரீ நாவா ஸந்தீர்ய கங்காம் அதிபதவி புந: த்வம் பாரத்வாஜம் ஆராத் நத்வா தத் வாக்ய ஹோதோ: அதி ஸுகம் அவஸ: சித்ரகூடே கிரீந்த்ரே तातोक्त्या यातुकामो वनमनुजवधूसंयुतश्चापधारः पौरानारूध्य मार्गे गुहनिलयगतस्त्वं जटाचीरधारी । नावा सन्तीर्य गङ्गामधिपदवि पुनस्तं भरद्वाजमारान्नत्वा तद्वाक्यहेतोरतिसुखमवसश्चित्रकूटे गिरीन्द्रे
க்ருஷணா! குருவாயூரப்பா! உனது தந்தையின் கட்டளைக்கு ஏற்ப வில்லை ஏந்தியபடி, உனது மனைவியுடனும், தம்பியுடனும் காட்டிற்குப் புறப்படத் தயாரானாய், உன்னுடன் காட்டிற்கு வர விரும்பிய உனது நாட்டு மக்களைத் தடுத்து நிறுத்தினாய். பின்னர் குகனின் இருப்பிடத்தை அடைந்தாய். அங்கு ஜடை, மரவுரி ஆகியவற்றை அணிந்தாய். பின்னர் படகில் கங்கையைக் கடந்து சென்றாய். வழியில் இருந்த பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை வணங்கி, அவருடைய சொல்லை மதித்து, சிறப்பான மலையாகிய சித்ரகூட மலையில் வசித்தாய்.