Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 348)

Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1

ஆருந்தாநே ருஷாந்தே ப்ருகுகுல திலகே ஸங்க்ரமய்ய ஸ்வதேஜோ யாதே யாதோSஸ்யயோத்மாம் ஸுகமிஹ நிவஸந் காந்தயா காந்தமூர்த்தே சத்ருக்நேநைகதாதோ கதவதி பரதே மாதுலஸ்யாதிவாஸம் தாதாரப்தோSபிஷேகஸ்தவ கில விஹத: கேகயா தீச புத்ர்யா ஆருந்தாநே ருஷாந்தே ப்ருகுகுல திலகே ஸங்க்ரமய்ய ஸ்வதேஜ: யாதே யாத: அஸி அயோத்யாம் ஸுகம் இஹ நிவஸந் காந்த்யா காந்தமூர்த்தே சத்ருக்நேந ஏகதா அத: கதவதி பரதே மாதுலஸ்ய அதிவாஸம் தாத ஆரப்த: அபிஷேக: தவ கில விஹத: கேகய அதீச புத்ர்யா आरुन्धाने रुषाऽन्धे भृगुकुलतिलके संक्रमय्य स्वतेजो याते यातोऽस्ययोध्यां सुखमिह निवसन्कान्तया कान्तमूर्ते । शत्रुघ्नेनैकदाथो गतवति भरते मातुलस्याधिवासं तातारब्धोऽभिषेकस्तव किल विहतः केकयाधीशपुत्र्या

க்ருஷணா! குருவாயூரப்பா! நீ செல்லும் போது உன்னைக் கோபத்துடன் ப்ருகு குலத்திற்குத் திலகம் என்று கூறப்படும் பரசுராமர் வழிமறித்தார். அப்போது உன்னுடைய ஒளியால் மயங்கி, தன்னுடைய ஒளியையும் உனக்கு அளித்துச் சென்றார். அதன் பின்னர் நீ அயோத்தி சென்றாய். பார்ப்பவர்கள் மனதைக் கவரும் அழகுடையவனே! அயோத்தியில் நீ சீதையுடன் சுகமாக வாழ்ந்து வந்தாய். ஒருமுறை உனது தம்பி பரதன், சத்ருக்னனோடு சேர்ந்து, தனது மாமனார் வீட்டிற்குச் சென்றான். அந்த நேரத்தில் உனது தந்தை உனக்கு மகுடம் சூட்டி, பட்டாபிஷேகம் செய்ய முயன்ற முயற்சியானது, கைகேயியால் தடுக்கப்பட்டது அல்லவா?